அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் “கிளீன் ஸ்ரீ லாங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் கரையோரப் பகுதியைச் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட்டன.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்துக்குட்பட்ட களுதாவளை கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் நேற்று சனிக்கிழமை (23) தீவிரமாக நடைபெற்றன.
இலங்கை இராணுவத்தின் குருக்கள்மடம் முகாம் படையினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சிரமதானப் பணிகளை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் ஆரம்பித்துவைத்தார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இலங்கை இராணுவத்தின் குருக்கள்மடம் முகாம் படையினர், சிவில் பாதுகாப்பு படையினர், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை, களுவாஞ்சிக்குடி பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்கள் என பெருமளவினர் கடற்கரையில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டனர்.