களனிகங்கை கடலுடன் சங்கமிக்கும் பகுதியில் அதிகளவான குப்பை – சிதம்பரப்பிள்ளை மனோகரன்

காக்கைதீவு (கொழும்பு – 15,)கடற்கரையில் களனிகங்கை கடலுடன் சங்கமிக்கும் பகுதியில் அதிகளவான குப்பைகள் அன்றாடம் கரையொதுங்குவது கடற்கரை பிரதேசத்தின் புனிதத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் காணப்படுவதாக தெரிவித்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிதம்பரப்பிள்ளை மனோகரன், இதன் சுற்றுச்சூழல் பாதுகாப்பை பேண க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நீண்டகால பொறிமுறை ஒன்றை அமுல்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு களநிலைமைகளை ஆராய்ந்த பின்னர், சிதம்பரம் மனோகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் தெரிவித்தவர்,

கொழும்பு காக்கைதீவு கடற்கரைப் பகுதி ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினங்களில் சிரமதான அடிப்படையில் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பல தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் ஆதரவுகளை வழங்கி வருகின்றன. இதனால் எவ்வித முன்னேற்றங்களும் இல்லை. குப்பைகளை அப்புறப்படுத்துவது தொடர்பில் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

கடற்கரையில் ஒதுங்கும் குப்பைகளால் காக்கை தீவு கடற்பகுதி மற்றும் அங்குள்ள மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனை துப்புரவு செய்தும் எந்த பிரியோசனமும் இல்லை. இதனை தடுப்பதற்கு அரசாங்கம் உடனடியாக குப்பைகளை பொது இடங்களில் வீசுவோருக்கு எதிராக 50 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபா வரை தண்டப்பணத்தை அறவிடவேண்டும்.

ஒரு சிலரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் மனிதர்களுக்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழல், கடல்வாழ் உயிரினங்களான ஆமை உள்ளிட்டவற்றுக்கு பெரும் பாதிப்பையும் அச்சுறுத்தலையும் எற்படுத்தும். அத்துடன் எதிர்காலத்தில் எமது நாட்டின் வளத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

dd

வடமராட்சியின் இரண்டாவது கந்தபுராண விழா!

November 18, 2025

வடமராட்சி கந்தபுராண கழகம் நடாத்திய இரண்டாவது கந்தபுராண விழா வடமராட்சி வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அதன் தலைவர்

1000922193

வல்வெட்டித்துறையில் 90 பேர் இரத்ததானம்!

November 18, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டித்துறை இரத்ததான சங்கம்நடாத்திய இரத்ததான முகாமில் 90 பேர் இன்று இரத்ததானம் செய்துள்ளனர். வல்வெட்டித்துறை நெடியாகாடு கணபதி

dan

தனுஷ் இயக்கத்தில்; ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படம்

November 18, 2025

உலக நாயகன் கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படம் தயாரிக்க உள்ளார்.

kan

3 நாட்களில் ரூ.25 கோடி வசூலித்த “காந்தா”

November 18, 2025

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான படம் ‘காந்தா’. இப்படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்

sim

சிம்பு -ராம்குமார் பாலகிருஷ்ணன் படம் எப்போது?

November 18, 2025

சிம்பு நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் STR 49 திரைப்படம் தயாராக இருந்தது.ஆனால் அப்படம் திடீரென தள்ளி வைக்கப்பட்ட நிலையில்

tea

2030 இல் 2.5 பில்லியன் டொலர் வரை தேயிலை ஏற்றுமதி வருமானம்?

November 18, 2025

அரசாங்கத்தால் 2030ஆம் ஆண்டு தேயிலை உற்பத்திக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 400 மில்லியன் கிலோ கிராம் இலக்கில் 75 சதவீத பங்களிப்பு

raugh4

இஸ்ரேல் கருவியாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு மாற்றப்பட்டுள்ளது – ரவூப் ஹக்கீம்

November 18, 2025

பயங்கரவாத விசாரணைப்பிரிவு இஸ்ரேலுக்கான கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டிக்க முடியாத அளவுக்கு வெளிவிவகார அமைச்சு கோழைத்தனமாக

Viyaskantha

இலங்கை கிரிக்கெட் அணியில் மீண்டும் இணையும் வியாஸ்காந்த்!

November 18, 2025

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடருக்கான இலங்கை தேசிய ஆடவர் அணியில் இளம் சுழற் பந்து வீச்சாளர் விஜயகாந்த்

anantha

நாமல் ராஜபக்சவிற்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு – அமைச்சர் ஆனந்த விஜயபால!

November 18, 2025

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு உண்டு என பொது

pu

இனவாதத்தை தூண்ட முயற்சிக்க வேண்டாம் திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் பற்றி சபையில் – ஜனாதிபதி

November 18, 2025

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை வைத்து இனவாதத்தை தூண்ட முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின்

rat

மழையால் பல பகுதிகளில் மண்சரிவு

November 18, 2025

இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இம்மாவட்டத்தில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால், மண்சரிவு அபாயமுள்ள

Aaruthiru

வவுனியா பல்கலையில் தமிழ்மொழி மூலம் கற்கும் மாணவர்களுக்கு உரிய முறையில் பயன் கிடைக்க வேண்டும் – கலாநிதி ஆறு திருமுருகன்

November 18, 2025

வவுனியா பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மூலமான பட்டப்படிப்புத் துறைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி