கல்வி சீர்திருத்தச் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல நிபுணர் குழு

கல்வி சீர்திருத்தச் செயல்பாடுகளை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்காக ஜனாதிபதியினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அருண கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்க மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

இந்தக் கல்விச் சீர்திருத்தச் செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுத்துவதற்காக 2026ஆம் ஆண்டுக்கு 17 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும்.

அத்துடன், 23,304 பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி மார்ச் 5ஆம் திகதியுடன் நிறைவடையும். அதன் பின்னர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை எம்மால் முன்னெடுக்க முடியும்.

சாதாரண தர முறைமை வழமை போன்று தொடரும், ஆனால் புதிய பாடத்திட்ட மேம்பாட்டுடன் அதன் வடிவம் மாற்றமடையும். இந்தச் செயல்பாட்டின் கீழ் மதிப்பீட்டு முறைகள் அமல்படுத்தப்படும். எமது நாட்டைப் போன்ற சூழலில், ஆசிரியர் மற்றும் மாணவர் இடையிலான தனிப்பட்ட தொடர்புகள் காரணமாக சில சிக்கல்கள் எழக்கூடும் என்பதை நாம் அறிவோம். இது குறித்து கலந்துரையாடி, அந்த விகிதாசாரங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை நிபுணர்கள் தீர்மானிப்பார்கள்.

குறிப்பாக ஆங்கிலப் பாடத் தொகுதியில் சில குறைபாடுகள் காணப்பட்டன. அவற்றை நாம் திருத்திக் கொள்ள வேண்டும். பொறுப்பற்ற முறையில் செயற்பட்டமையாலேயே இவ்வாறான விடயங்கள் பாடப்புத்தகத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஏனைய பாடப்புத்தகங்கள் தொடர்பிலும் நிபுணர்கள் ஊடாக ஆழமான விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன் மூலம், 2027ஆம் ஆண்டில் 6ஆம் தரத்திலிருந்து மீண்டும் கல்விச் சீர்திருத்தச் செயல்பாடுகளை ஆரம்பிப்போம்.

2026ஆம் ஆண்டிலிருந்து 6 ஆம் தர மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இதற்குத் தயாராக இருந்ததாகச் சிலர் கூறுகின்றனர். அந்த மாணவர்களுக்கு 7 ஆம் தரத்திலிருந்தாவது இதனை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை அரசியல்வாதிகளாகிய நாம் தீர்மானிக்க முடியாது.

கல்வியியலாளர்கள் மற்றும் நிபுணர்களுடனான கலந்துரையாடலுக்குப் பிறகு, 2027இல் 7ஆம் தரத்திலிருந்து மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்க முடியுமா என ஆராய்வோம். இந்தச் சீர்திருத்தச் செயல்பாடுகளைத் தொடர தேவையான நிபுணர்கள் மற்றும் குழுவினரை உள்ளடக்கிய குழுவொன்றை ஜனாதிபதி விரைவில் நியமிப்பார் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.