அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள லேக் டாஹோ பகுதியில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி ஒன்பது பேர் மாயமாகியுள்ளனர்.
ட்ரக்கி நகருக்கு அருகிலுள்ள காஸில் பீக் பகுதியில் நேற்று(17.2.2026)காலை இந்த விபத்து நிகழ்ந்தது.
மொத்தம் 15 பேரைக் கொண்ட குழுவொன்று அங்கு பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பனிச்சரிவு ஏற்பட்டது.
இதில் சிக்கியவர்களில் ஆறு பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்; மீட்கப்பட்டவர்களில் இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மாயமாகியுள்ள ஒன்பது பேரைத் தேடும் பணியில் 46க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும், அப்பகுதியில் நிலவும் கடும் பனிப்பொழிவு, பலத்த காற்று மற்றும் குறைந்த அளவிலான பார்வைத்திறன் காரணமாக மீட்புப் பணியில் பெரும் சவால்கள் நிலவுகின்றன.
பனிச்சரிவு ஏற்படும் அபாயம் 5க்கு 4 என்ற ‘உயர்’ நிலையில் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளதால், மீட்புப் படையினர் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.
இவ்வளவு மோசமான வானிலையிலும் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்றது ஒரு புத்திசாலித்தனமான முடிவாகத் தெரியவில்லை என உள்ளூர் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.