கறுப்பு ஜூலை; 43 வருட கால வலி சுமந்த ஈழத்தமிழர்களின் இனப்படுகொ*லை நினைவேந்தல்

“1983 கறுப்பு ஜூலையின் 43 வருட கால வலி சுமந்த ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையானது, வரலாற்றில் என்றும் மறக்க முடியாத வடுவாகும்” என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு. பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை இனக்கலவரத்தின் 43ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, கடந்த புதன்கிழமை (23) மாலை கல்முனைப் பகுதியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறைகளுக்கு எதிராகவும், படுகொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் கருத்துரைகள் இடம்பெற்றன.

“1983 ஜூலை 23 முதல் 30 வரையிலான காலப்பகுதியில் பேரினவாத சக்திகளால் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூரமான வன்முறைகள்; மறக்கவும் முடியாத, மன்னிக்கவும் முடியாத துயர நாளாகும். 43 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதன் வடு இன்னமும் ஆறாமல் காணப்படுகின்றது.

அக்காலப்பகுதியில் இடம்பெற்ற திட்டமிடப்பட்ட இனப்படுகொலையில், குறைந்தது 3,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். குறிப்பாகக் கண்டி, நுவரெலியா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களின் உயிர்களும், உடமைகளும், சொத்துகளும் முற்றிலும் சூறையாடப்பட்டன.

அன்றைய தினத்தில் வெறியாட்டத்தின் உச்சக்கட்டமாக அப்பாவித் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் குழந்தைகள் எரியூட்டப்பட்டும், கொதிக்கும் தார் பீப்பாய்களுக்குள் போடப்பட்டும் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இலங்கையை ஒரு சிங்கள நாடாக அறிவித்து, தமிழினத்தை முழுமையாக அழிக்கும் முனைப்புடன், அன்றைய சிங்கள ஆட்சியாளர்களின் ஆதரவுடனேயே இக்கொடூரம் அரங்கேற்றப்பட்டது” எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன், ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளர் ஆ. தர்மதாச (தொண்டமான்), இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கல்முனைத் தொகுதிக்கான இளைஞரணித் தலைவரும் சட்டத்தரணியுமான அ. நிதான்சன், ஈ.பி.ஆர்.எல்.எஃப் (EPRLF) மத்திய குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான சிவசுந்தரம் புண்ணியநாதன் (கரன்) உட்பட பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

srilanka un peace keeping

ஹெய்ட்டிக்கு படையினரை அனுப்புவதற்கு முன்னர் அவர்களின் கடந்காலங்கள் குறித்து நன்கு ஆராய்ந்தோம் – இராணுவ பேச்சாளர்

September 14, 2026

ஹைட்டி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் இயங்கும் வன்முறைக் கும்பல் தடுப்புப் படையில் (GSF) இலங்கை அமைதி காக்கும்

sanakyan

மயிலத்தமடு-மாதவனை மேய்ச்சல் நிலங்கள் அழிப்பு: கால்நடை வளர்ப்பாளர்களின் போராட்டம் 1,500 நாட்களைக் கடந்துள்ள நிலையில் மீண்டும் சட்ட நடவடிக்கை குறித்து சாணக்கியன் பரிசீலனை

September 14, 2026

கடந்த இரண்டு மாதங்களில், மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதிகளில் நிலைமை மிகவும் தீவிரமடைந்துள்ளது. பாரம்பரிய மேய்ச்சல் நிலங்கள் திட்டமிட்டு தீயிட்டுக்

news18-2026-06-28T062954.548-2026-06-bc99048549707a39ca182d6df5cdc02a-1200x800

“ஆபாச அரசியல் திமுகவிற்குப் புதிதல்ல!” – முதலமைச்சர் விஜய் மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்குத் தவெக ஐ.டி. விங் பதிலடி

September 14, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பத்தினர் குறித்து திமுகவினர் தொடர்ந்து முன்வைக்கும் விமர்சனங்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக

former-dmk-minister-sekar-babu-has-darshan-in-the-general-queue-at-tiruvannamalai

திருவண்ணாமலை கோவிலில் ‘விஐபி’ தரிசனம் மறுப்பு: பொது வரிசையில் நின்று சாமி கும்பிட்ட முன்னாள் அமைச்சர் சேகர்பாபு!

September 14, 2026

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்த திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்குச் சிறப்புத் தரிசனம் (VIP

paddy-lorry-stock-2026-09-13-22-56-11

தமிழகத்தில் முதற்கட்டமாக 401 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு: 42,000 டன் நெல் கொள்முதல்!

September 14, 2026

சென்னை: நடப்பு 2026-2027-ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் பருவத்தில் (KMS), விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்வதற்காகத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்

1774703-thirumavalavan-1

“ஆ. ராசாவின் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது; திமுக அரசியல் மாண்பைக் கடைப்பிடிக்கவில்லை!” – விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்

September 14, 2026

சிவகாசி: திமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா பேசிய கருத்துகள் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக விடுதலைச்

dailythanthi_2026-09-14_ddqq5hw3_police33

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை: கார்களில் பொருத்தப்பட்டிருந்த கட்சிக் கொடிகள் அகற்றம்!

September 14, 2026

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல்

40

தேசிய அளவில் மு.க. ஸ்டாலின் தலைமையில் 3-வது அணி? – தேசிய அரசியலில் பரபரப்பு!

September 14, 2026

சென்னை: நாடாளுமன்ற மக்களவையில் தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரசுடன் முரண்பாட்டில்

da91b71b3f023fdab7c8f6e3264e44e6

“தவறு செய்தது தவெகவினராக இருந்தாலும் அதிரடி நடவடிக்கை!” – அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை

September 14, 2026

திண்டுக்கல்: சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறு செய்த காரணத்திற்காகத் தவெகவினர் பலர்

1200-675-27624842-thumbnail-16x9-sdew

மயிலாடுதுறை வந்தடைந்தது காவிரி நீர்: மலர் தூவியும் நெல்மணிகளுடனும் விவசாயிகள் வரவேற்பு!

September 14, 2026

மயிலாடுதுறை: மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் விஜய்யால் திறந்துவிடப்பட்ட காவிரி நீர், கடைமடைப் பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையை வந்தடைந்ததையடுத்து விவசாயிகள்

dt-next_import_h-upload_2024_04_15_816286-setc

தொடர் விடுமுறை நிறைவு: சென்னை திரும்புவோருக்காக 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

September 14, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை முடிந்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காகப் போக்குவரத்துத்துறை விரிவான

ஆ

முதலமைச்சர் விஜய்யின் பேச்சைக் கண்டித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: ஆ. ராசா, மா. சுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு!

September 14, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யின் சட்டப்பேரவைப் பேச்சைக் கண்டித்து, சென்னையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக திமுக எம்.பி. ஆ. ராசா, முன்னாள்