கரையோரங்களில் குவிந்துள்ள பைபர் கிளாஸ் கழிவுகளை மீள்சுழற்சி செய்யும் திட்டம்

நீண்ட காலமாக மீன்பிடித் துறைமுகங்கள், இறங்குதுறைகள் மற்றும் கரையோரங்களில் குவிந்துள்ள பைபர் கிளாஸ் ஒதுக்கப்பட்ட படகுகள் மற்றும் கழிவுகளை முறையான வகையில் முகாமைத்துவம் செய்வதற்காக, கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் பைபர் கிளாஸ் மீள்சுழற்சித் திட்டத்திற்கான இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் நேற்று (09) கடற்றொழில் அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது. ‘Clean Sri Lanka’ (தூய்மையான இலங்கை) நிதியத்தின் ஊடாக 56 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துகொண்ட கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே பின்வருமாறு தெரிவித்தார்.

“நாடு முழுவதிலுமுள்ள மீன்பிடித் துறைமுகங்களில் 10,000 தொன்னுக்கும் அதிகமான பைபர் கிளாஸ் கழிவுகள் குவிந்துள்ளன. சுனாமிக்குப் பின்னர் எஞ்சிய படகுகள் மற்றும் நாளாந்தம் சேரும் சுமார் 20 தொன் அளவிலான கழிவுகள் சுற்றாடலுக்கும், கடற்றொழில் துறைக்கும் ஒரு பாரிய பிரச்சினையாகும். ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ் நாம் இப்பிரச்சினைக்கு ஒரு நிலையான தீர்வை வழங்குகிறோம். எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் பேருவளை பிரதேசத்தில் இந்த மீள்சுழற்சி இயந்திரத்தை நிறுவி, இந்தக் கழிவுகளைப் பயனுள்ள ஒரு உற்பத்தியாக மாற்றுவதே எமது இலக்காகும்.”

சீ-நோர் (Cey-Nor) மன்றத்தின் தலைவர் அஜித எதிரிசிங்க அவர்கள் விளக்கியதற்கமைய, மணிக்கு 500 கிலோகிராம் கொள்ளளவு கொண்ட இந்த நவீன இயந்திரத்தின் மூலம் பைபர் கிளாஸ் பாகங்கள் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு, தூளாக்கப்பட்டு, சீமெந்துடன் கலக்கப்பட்டு கட்டடக் கற்கள் (Block stones), நடைபாதை கற்கள் (Paving blocks) போன்றன உற்பத்தி செய்யப்படுகின்றன. மணலுக்குப் பதிலாக சுமார் 30% இந்த பைபர் தூளைப் பிரதியீடு செய்வதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் Block கற்கள், சாதாரண Block கற்களை விட எடையில் குறைந்தவை எனவும் வலிமையில் கூடியவை எனவும் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச மற்றும் ஜனாதிபதி மேலதிக செயலாளர் (‘Clean Sri Lanka’ வேலைத்திட்டம்) பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்