கரைத்துறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வலைஞர்மடம் கிராமம் தனித் தீவாக மாறியுள்ளது!

முல்லைத்தீவு – கரைத்துறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வலைஞர்மடம் கிராமத்திற்கு செல்வதற்கான பிரதான வீதிகள் மற்றும் கிராமத்திலுள்ள உள்ளக வீதிகள் என்பன சீரின்மையால் குறித்த வலைஞர்மடம் கிராமம் தனித்தீவாக மாறியுள்ளதாக அந்தக் கிராமமக்களால் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில் கிராமமக்களின் முறையீட்டினைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வெள்ளிக்கிழமை (16) வலைஞர்மடம் கிராமத்திற்கு நேரடியாகச் சென்று நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

அந்தவகையில் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு A-35 பிரதான வீதியிலிருந்து வலைஞர்மடத்திற்கு வருகைதரும் மாதா சந்தி வீதி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதை இதன்போது கிராமமக்கள் நாடாளுமன்ற உறுப்பினரது கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால் மக்கள் கிராமத்தைவிட்டு வெளியேறும் பிரதான மார்க்கமாக குறித்த வீதியே காணப்படுவதாகவும் இதன்போது மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தப்பட்டது.

அந்தவகையில் குறித்த வலைஞர்மடம் மாதாசந்தி வீதி சீரின்றிக் காணப்பட்டதால் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின்போதும் படகுகளின்மூலமே மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டதாகவும், இவ்வீதி சீரின்றிக்காணப்படுவதால் இந்த வலைஞர்மடம் கிராமம் தனித்து விடப்பட்ட தீவாக மாறியுள்ளதாகவும் கிராம மக்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் தெரியப்படுத்தப்பட்டது.

எனவே தமது நிரையைக் கருத்திற்கொண்டு குறித்த வீதியை சீரமைப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் கிராமமக்கள் கோரிக்கைவிடுத்தனர்.

அத்தோடு பொக்கணை வலைஞர்மடம் இணைப்புவீதி, வலைஞர்மடம் சவக்காலை வீதி உள்ளிட்ட உள்ளக வீதிகளின் சீரமைப்புத் தொடர்பிலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் கிராமமக்களால் கோரிக்கைவிடுக்கப்பட்டது.

மேலும் இதன்போது வலைஞர்மடத்தில் சுற்றுலா கடற்கரை ஒன்றினை ஏற்படுத்துவதுதொடர்பிலும் இதன்போது கிராமமக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் வலைஞர்மடம் கிராமமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், எழுத்துமூலமாக தம்மிடம் கோரிக்மைகளைக் கையளிக்குமாறு தெரிவித்ததுடன், மக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை உரிய இடங்களுக்கு கொண்டு சென்று அக்கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.

குறித்த களவிஜயத்தில் கரைத்துறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் ஜோசெப் மாசிலாமணி அவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு