கனடாவில் நிரந்தர வதிவிடத்தை எதிர்பார்போருக்கு அரசாங்கம் முக்கிய ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுமார் 6,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமத்திற்கு விண்ணப்பிக்க கனடா அழைப்பு விடுத்துள்ளது.
கனடா அரசு, கனேடியன் எக்ஸ்பிரியன்ஸ் க்ளாஸ் எக்ஸ்ப்ரஸ் என்ட்ரி (Canadian Experience Class Express Entry) திட்டத்தின் கீழ், வெளிநாட்டுத் திறமையான தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமத்திற்கான விண்ணப்ப அழைப்புகளை வழங்கியுள்ளது.
இதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் இதுவரை 100,000 க்கும் மேற்பட்ட நிரந்தர வதிவிட உரிமங்களைக் கனடா வழங்கியுள்ளது.
குறிப்பாக, மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மற்றும் பல்வேறு துறைகளில் திறமையானவர்கள், இந்த திட்டத்தின் மூலம் கனடாவில் நிரந்தரமாகக் குடியேற வாய்ப்பு பெறுகின்றனர்.