கனடாவில் பெயர் வெளியிடப்படாத பீல் க்ரைம் ஸ்டாப்பர்ஸ் தகவலின் அடிப்படையில், பீல் பிராந்திய காவல்துறையின் மூலோபாய மற்றும் தந்திர அமலாக்க காவல் பிரிவு அதிகாரிகளின் தேடுதலின் விளைவாக ஒரு துப்பாக்கி மற்றும் ஃபென்டனில், கோகெய்ன், மெத்தாம்பெட்டமின் ஆகியவற்றில் மொத்தம் 24,000 டாலர் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒருவர்மீது தற்போது 18 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. என தெரிவிக்கும் பீல் க்ரைம் பிரிவினர் மக்களுக்கு சில முக்கிய அறிவித்தலை வெளியிட்டுள்ளார்கள்.
‘உங்கள் தகவலும் மாற்றத்தை உருவாக்கலாம். பெயர் ரகசியமாகவே இருக்கும். குற்றங்களைத் தடுக்க உதவுங்கள். தகவல் அளிக்க peelcrimestoppers.ca இணையதளத்தைப் பார்வையிடுங்கள் அல்லது 1-800-222-TIPS (8477) என்ற எண்ணிற்கு அழையுங்கள்’ என அறிவித்துள்ளார்கள்.