ஆண்டுதோறும் நடைபெறும் கனடா – பிரான்ஸ்; வர்த்தக கொண்டாட்டங்கள் மற்றும் வணிக விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டமை பெருமையளிப்பதாக ஒன்ராறியோ முதல்வர் டக் பேர்ட் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
ஒன்ராறியோ மற்றும் பிரான்ஸ் ஆகிய இடங்களுக்கிடையேயான வலுவான பொருளாதார உறவுகளை கொண்டாட மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இருபுறமும் சுமார் 5 பில்லியன் டொலர் வர்த்தகம் நடைபெற்று வரும் நிலையில், இந்த உறவு இரு தரப்பிலும் வேலை வாய்ப்புகளையும் புதிய சந்தர்ப்பங்களையும் உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.