களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுகுருந்த கடலில் மிதந்த பொதிகளிலிருந்து போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் விசேடம அதிரடிப்படையினர், இன்று புதன்கிழமை (05) காலை கட்டுகுருந்த கடலில் பொதிகள் மிதப்பதை கண்டு அதனை சோதனை செய்துள்ளனர்.
இதன்போது குறித்த பொதிகளிலிருந்து 11 கிலோ 759 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருளின் மொத்த மதிப்பு 03 கோடி ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.