கடற்படையினரால் கணவர் சித்திரவதை: மனைவி உண்ணாவிரதப் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில், கடற்படையினரால் மீனவரான தனது கணவர் சித்திரவதை செய்யப்பட்டமைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. எனவே தாம் மட்டக்களப்பு உதவி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மீனவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (18) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில், பாதிக்கப்பட்ட மீனவரும் அவரது மனைவியும் இதனை தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த 05ஆம் திகதி செட்டிபாளையம் கடற்கரை பகுதியில், கல்லடி கடற்படை முகாமைச் சேர்ந்த புலனாய்வு பிரிவு அதிகாரி தலைமையிலான குழுவினர், “சுருக்கு வலை” பயன்படுத்தி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி, மீனவரை கைது செய்துள்ளனர்.

அப்போது, அவரை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் முழங்காலில் நிறுத்தி தாக்கியதாகவும், பொதுமக்கள் முன்னிலையில் சித்திரவதை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பின்னர், அவரை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று, அதன் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குப் பின்னர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த மீனவர் உடல்நிலை குறைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தாக்குதல் இடம்பெற்றதற்கான மருத்துவச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடந்த 8ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தாலும், விசாரணைகள் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

10, 14 மற்றும் 17ஆம் திகதிகளில் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோதும், சம்பந்தப்பட்ட கடற்படை அதிகாரி பல்வேறு காரணங்களால் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொலிஸார் மீது நம்பிக்கை குறைந்துள்ளதாகவும், நீதியை பெறுவதற்காக மேலதிக அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் அளிக்கப்பட்ட முறையீட்டின் போது, “சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது” என தெரிவிக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், நீதி கிடைக்க வேண்டி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,