கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய நிறைவுநாள் விசேட பூஜைகள்

ச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இலங்கை இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் வெகு விமர்சையாக இன்று 28ஆம் திகதி சனிக்கிழமை இறுதிநாள் விசேட பூஜைகள் நடைபெறவுள்ளன. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி் இன்று சனிக்கிழமை (28) காலை சிறப்புக் கூட்டுத் திருப்பலியாக நிறைவேற்றப்படவுள்ளது.

யாழ்.மறை மாவட்ட குரு முதல்வர் மற்றும் இந்திய சிவகங்கை மறை மாவட்ட குரு முதல்வர் ஆகியோரின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட இரு நாடுகளின் அருட்தந்தையர்கள் அருட் சகோதரிகளின் பங்கேற்பில் இந்த கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

வருடாந்த புனித திருவிழா நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை (27) மாலை 4.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து திருச் செபமாலை தியானம் மற்றும் இலங்கை – இந்திய பக்தர்கள் இணைந்து நடத்தும் திறந்த வெளி சிலுவைப்பாதை ஆகிய நிகழ்வுகள் மாலை ஆலய வளாகத்தில் நடைபெற்றன.

இதனைத்தொடர்ந்து இன்றுசனிக்கிழமை (28) காலை 7.30 மணிக்கு கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி சிறப்புக் கூட்டுத் திருப்பலியாக நிறைவேற்றப்படவுள்ளது. யாழ்.மறை மாவட்ட குரு முதல்வர் மற்றும் இந்திய சிவகங்கை மறை மாவட்ட குரு முதல்வர் ஆகியோரின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட இரு நாடுகளின் அருட்தந்தையர்கள் அருட் சகோதரிகளின் பங்கேற்பில் இந்த கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

இம்முறை திருவிழாவில் இந்தியாவின் இராமேஸ்வரத்திலிருந்து 85 விசைப்படகுகள் மற்றும் 24 ஏனைய படகுகளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகைத் தந்துள்ளனர். திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்காக சகல அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இலங்கை கடற்படை மேற்கொண்டுள்ளது.

யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அடிகளார் இம்முறை திருவிழா தொடர்பில் தெரிவிக்கையில்;

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக வெள்ளிக்கிழமை (27) மாலை கொடியேற்றமும் நற்கருணை ஆராதனையும், மாலை வழிபாடுகளும் நடைபெற்றது. சனிக்கிழமை (28) காலை திருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். அனைத்து மக்களும் ஒன்று கூடி புனித அந்தோனியார் திருத்தலத்தில் நமது நாட்டுக்காகவும், நம் நாட்டு மக்கள் மற்றும் அனைத்து மக்களுடைய சுதந்திரமான வாழ்வுக்காகவும் ஆசீர்வாதம் வேண்டி மன்றாடுவோம்.

அதற்காக அனைவரையும் அன்போடு அழைத்து நிற்கின்றோம். வழமை போல இந்தத் திருவிழாவுக்கு இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் பெருமளவு குருக்கள் மற்றும் துறவிகள் வருகை தரவுள்ளனர்.

இந்தியாவின் சிவகங்கை மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை லூர்து ஆனந்த் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட குருக்கள், துறவிகளும் அதேவேளை, இலங்கையில் யாழ். மறை மாவட்டத்தின் குருமுதல்வராகிய எனது தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குருக்கள் துறவிகள் இந்த திருவிழாவில் பங்குகொள்ளவுள்ளார்கள் என்றார்.

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய

de

கிளங்கன் ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு!

March 3, 2026

டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்கு, அங்கு பணிபுரியும் சிற்றூழியர்கள் மூவரால்

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்

kolla

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

March 3, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக்

sunna

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

March 3, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (02)

minn

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

March 3, 2026

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை

Dau

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் மதுபான விற்பனை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து

March 3, 2026

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களில் உள்ள மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும்

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –