ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கைது; அரசாங்கத்தின் மற்றுமொரு ஏமாற்று வேலை

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கைது நடவடிக்கை அரசாங்கத்தின் மற்றுமொரு ஏமாற்று வேலை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கர்தினாலையும், கத்தோலிக்க திருச்சபையையும், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் ஏமாற்ற இந்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கையாகவே சுரேஷ் சலே கைதினை நான் கருதுகிறேன். மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இதுபோன்ற ஏமாற்று வேலை மேற்கொள்ளப்படுகிறது.

சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதற்கான காரணம் தங்களுக்குத் தெரியாது என்று பொலிஸார் கூறுகின்றனர். ஒரு காரணம் இருக்கிறது. அதுதான் பிள்ளையானின் முன்னாள் ஊடகச் செயலாளரான அசாத் மௌலானா என்ற நபர் சேனல் 4 ஊடகத்திடம், 2018ஆம் ஆண்டு சுரேஷ் சலே, சஹ்ரானை தனிப்பட்ட முறையில் சந்தித்ததாகவும், அந்த சந்திப்பில் அவர் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

அப்போது கூறப்பட்டது, இந்த நாட்டை பாதுகாப்பற்ற நிலைக்கு கொண்டு சென்றால் தான் கோட்டாபய ஜனாதிபதியாக முடியும் என்று. நாம் அறிந்திருப்பது போல, செனல் 4 என்பது இராணுவத்திற்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுகளை முழுமையாக முன்வைக்கும் ஊடகம். அதனால் தான் சுரேஷ் சலே அவர்களை கைது செய்திருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.

சுரேஷ் சலே என்ற அந்த உளவுத்துறை அதிகாரி 2016 டிசம்பர் முதல் 2018 டிசம்பர் வரை மலேசியாவில் இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றினார். 2019 ஜனவரி 3ஆம் திகதி முதல் 2019 டிசம்பர் வரை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் இருந்தார். அதாவது, அவர் இலங்கையில் இருக்கவில்லை.

அப்படியானால், இலங்கையில் இல்லாத சுரேஷ் சலே எப்படி சஹ்ரானை சந்திக்க முடியும்? இலங்கைக்கு இரகசியமாக படகில் வந்து சென்றாரா என்ற கேள்வி எழுகிறது. அப்படிப்பட்ட உளவு அளவிலான நபர்கள் இலங்கையில் இருப்பதாக யாரும் நம்ப மாட்டார்கள் என்று தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய

de

கிளங்கன் ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு!

March 3, 2026

டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்கு, அங்கு பணிபுரியும் சிற்றூழியர்கள் மூவரால்

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்

kolla

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

March 3, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக்