சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு இந்தியாவின் றோஹித் ஷர்மா முன்னேறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது, மூன்றாவது போட்டிகளில் 73, 121 ஓட்டங்களைப் பெற்ற நிலையிலேயே மூன்றாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி முதலாமிடத்தையடைந்துள்ளார்.
இங்கிலாந்துக்கெதிரான முதலாவது போட்டியில் 78 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்தின் டரைல் மிற்செல், ஆறாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஐந்தாமிடத்தையடைந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது போட்டியில் 61 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் ஷ்ரேயாஸ் ஐயர், 10ஆம் இடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.