கவின் நடிப்பில் சமீபத்தில் கிஸ் என்ற திரைப்படம் வெளியானது. நல்ல விமர்சனங்களை பெற்றாலும் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை. அதற்கு என்ன காரணம் என இப்படத்தின் இயக்குனர் சதிஷ் கூறியிருக்கின்றார்
தமிழில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் தான் கவின்.சின்னத்திரை மூலம் பிரபலமான கவின் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமடைந்தார். அந்நிகழ்ச்சியில் மூலம் கிடைத்த புகழை சரியாக பயன்படுத்தி அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக கமிட்டானார். அந்த வகையில் அவர் கமிட்டான லிப்ட் மற்றும் டாடா ஆகிய இரு திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அதனைத்தொடர்ந்து ஸ்டார், ப்ளடி பேக்கர் என இரு படங்களில் நடித்தார். லேட்டஸ்ட்டாக அவரது நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கிஸ் என்ற திரைப்படம் வெளியானது. நடிகர் மற்றும் பிரபலமான டான்ஸ் மாஸ்டரான சதிஷ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் கடந்த மாதம் திரையில் வெளியானது.
ஆனால் கிஸ் என்ற டைட்டிலை பார்த்ததும் இது ஒரு அடல்ட் படமாக இருக்குமோ என சிலர் நினைத்துவிட்டனர். எனவே டைட்டில் இப்படத்திற்கு பாதகமாக அமைந்ததாக நான் கருதுகின்றேன். அதைப்போல கரூர் துயர சம்பவம் நடந்து முடிந்த நிலையில் இப்படம் வெளியாகியிருந்தது. நாட்டில் இப்படி ஒரு துயர சம்பவம் அரங்கேறியிருந்த நிலையில் அந்த சமயத்தில் இப்படம் வெளியானதும் இப்படம் சரியாக போகாததற்கு ஒரு காரணமாக இருக்குமோ என நான் நினைக்கின்றேன் என சதிஷ் பேசியிருக்கிறார்.