மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள காயங்கேணி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
காயங்கேணி கடற்கரையில் நேற்று சனிக்கிழமை மாலை சடலம் ஒன்று கரையொதுங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு மீனவர்கள் வாகரைப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்குத் தடயவியல் பொலிஸ் பிரிவினர் சகிதம் சென்ற பொலிஸார், உருக்குலைந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.