உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; அதிகாரிகள்  விடயத்தை திசைதிருப்புகின்றனரா? – சாணக்கியன்  

சாரா ஜெஸ்மின் விடயத்தில் மூன்றாவது தடவையாக டி.என்.ஏ பரிசோதனை செய்யவில்லை என்று அவரின் தாய் தற்போது குறிப்பிடுகிறார். மூன்று டி.என்.ஏ பரிசோதனைகள் செய்திருந்தால், அந்த டி.என்.ஏ யாருடையது? கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சாரா ஜெஸ்மினின் வீட்டுக்கு சென்று அவரிடம் தாயிடம் ‘உங்களின் மகள் இறக்கும்போது இரண்டு மாத கர்ப்பிணி, அவரை இராணுவம் அடக்கம் செய்துள்ளது’ என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். ஆனால் சாரா ஜெஸ்மின் உயிருடன் இருப்பதாக அமைச்சர் கூறியிருந்தார். இதனால் இந்த விடயத்தில் சில சந்தேகங்கள் இருக்கின்றன. இதனை திசைதிருப்ப சில அதிகாரிகள் முயற்சிக்கின்றனரா என்ற சந்தேகங்கள் உள்ளன என்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னெடுக்கும் விசாரணைகள் தொடர்பில் அரசாங்கத்தை பாராட்டுகின்றோம். கட்சி பேதமின்றி அரசாங்கத்திற்கு நன்றியை கூறிக்கொள்கின்றோம். சுரேஷ் சலே போன்றவர்களை கைது செய்வார்களா? என்ற சந்தேகம் கடந்த காலங்களில் காணப்பட்டது. ஆனால் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வரவேற்கிறோம்.

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் உதய கம்மன்பில நூல் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இதுபோன்ற ஒரு புத்தகத்தை ‘ வேட்டை’என்ற பெயரில் பிள்ளையான் எழுதியிருந்தார். ஆனால் அவர் புத்தகத்தை எழுதக்கூடிய நிலையில் இருக்கும் ஒருவரா? இல்லையா? என்று நாட்டில் அனைவருக்கும் தெரியும். எவ்வாறாயினும் இந்த புத்தகத்தை ரொஹான் குணரட்ன என்ற நபரே எழுதியுள்ளார்.

இதனை பொறுப்புடன் கூறுகின்றேன். இந்த புத்தகத்திற்கு ஒருவர் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ரொஹான் குணரட்ன எழுதியுள்ளதுடன், அதனை பிள்ளையான் வெளியிட்டார். இப்போது அதுபோன்ற புத்தகத்தையே கம்மன்பிலவும் வெளியிட்டுள்ளார். இந்த புத்தகம் தொடர்பிலும் எமக்கு சந்தேகங்கள் உள்ளன.

முக்கியமான விடயம் என்னவென்றால் ரொஹான் குணரட்ன என்ற நபரின் அலுவலகம், பத்தரமுல்ல கடவுச்சீட்டு அலுவலக கட்டடத்துக்கு அருகில் இருந்தது.பிள்ளையானின் புத்தகத்திற்கு தேவையான தகவல்களை வழங்க திரிபொலி தரப்புடன் தொடர்புடைய ஓட்டமாவடியை சேர்ந்த கலீல் என்ற நபரே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டுக்கு பின்னர் கலீல், 2015-2019 காலத்தில் பிள்ளையானுடன் ஒன்றாக சிறையில் இருந்தார். இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் முறையாக நடக்க வேண்டும் என்று அரசாங்கத்தினால் ஜனாதிபதி மட்டத்தில் ஆர்வமாக இருந்தாலும் பொலிஸார் தொடர்பில் என்னால் சான்றுகளை வழங்க முடியாது. அதற்கு காரணம் பொலிஸில் உள்ள குழுவொன்று இந்த விசாரணையை திசைத்திருப்ப அல்லது இந்த விசாரணையை தவறான பக்கத்திற்கு கொண்டு செல்ல இன்றும் முயற்சிக்கின்றனர் என்ற சந்தேகம் காணப்படுகிறது..

இதேவேளை இஸ்மயில் இசாக் என்ற நபர் தொடர்பில் நான் இந்தப் பாராளுமன்றத்துக்கு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன். இந்த நபர் கடந்த செப்டம்பர் 4ஆம் திகதி இந்த நாட்டில் இருந்து சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். இதன்படி இவர் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். சிலர் சாட்சியாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரை சந்திக்கும் போது கீழ்மட்ட அதிகாரிகள் அதற்கு கோபப்பட்டு அதனை திசை திருப்புகின்றனர்.

இதனால் இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். வழக்குகளில் சாட்சியங்கள் தொடர்பான விளக்கங்களை பொலிஸாரே முன்வைக்கின்றனர். இதனால் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

சாரா ஜெஸ்மின் விடயத்தில், தன்னிடம் மூன்றாவது தடவையாக டி.என்.ஏ பரிசோதனை செய்யவில்லை என்று அவரின் தாய் தற்போது குறிப்பிடுகிறார். மூன்று டி.என்.எ பரிசோதனைகள் செய்திருந்தால்,மூன்றாவது டி.என்.எ யாருடையது?

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சாரா ஜெஸ்மினின் வீட்டுக்கு சென்று அவரிடம் தாயிடம் உங்களின் மகள் இறக்கும் போது இரண்டு மாத கர்ப்பினி என்றும், அவரை இராணுவம் அடக்கம் செய்துள்ளது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். ஆனால் சாரா ஜெஸ்மின் உயிருடன் இருப்பதாக அமைச்சர் கூறியிருந்தார். இதனால் இந்த விடயத்தில் சில சந்தேகங்கள் இருக்கின்றன. இதனை திசை திருப்ப சில அதிகாரிகள் முயற்சிக்கின்றனரா, என்ற சந்தேகங்கள் உள்ளன.

அத்துடன் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் நடத்தப்படும் என்று அமைச்சர் குறிப்பிடுகிறார். இதற்கு முன்னரும் இரண்டு ஆவணப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

ANURA PARL

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த வருடத்திற்குள் நீக்கப்படும்: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர  அறிவிப்பு!

June 25, 2026

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த வருடத்திற்குள் (2026) முழுமையாக நீக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

anura

ஊழல், போதைப்பொருள் மற்றும் அரசியல் பிணைப்பை ஒழிக்கப் போர்க்கால நடவடிக்கை: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர அதிரடி உரை!

June 25, 2026

கொழும்பு ஊழல், திட்டமிட்ட பாதாள உலகக் குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களுக்கும் அரசியலுக்கும் இடையே நிலவும் இரகசியப்

ANURA PARL

கைதானவர்கள் குறித்த மேலும் பல திடுக்கிடும் விபரங்கள் இன்று வெளியாகும்: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

June 25, 2026

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (ஜூன் 25) கைது செய்யப்பட்டுள்ள முக்கிய பிரமுகர்கள் தொடர்பான மேலும் பல அதிர்ச்சியூட்டும்

PRISIONERS PRO

சிறைச்சாலைகளில் 184 மரணங்கள்: இலங்கைக்கு வந்துள்ள ஐநா குழுவிடம் கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு அதிர்ச்சி அறிக்கை

June 25, 2026

இலங்கைச் சிறைச்சாலைகளில் இடம்பெற்று வரும் கைதிகளின் மரணங்கள், சிறைச்சாலைகளின் அதிகளவிலான நெருக்கடி நிலை, சித்திரவதைகள் மற்றும் தடுப்புக்காவல் கூடங்களின் மோசமான

ARMY OCCU LAND

வலிகாமம் வடக்கு: மக்களின் சொந்தக் காணியில் இராணுவப் பண்ணை பெயர்ப்பலகை! ஆக்கிரமிப்பை நிரந்தரமாக்க முயற்சி என மக்கள் கவலை

June 25, 2026

வலிகாமம் வடக்கு அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் (HSZ) அமைந்துள்ள, தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியாரின் விவசாயக் காணிகளில் இலங்கை இராணுவம்

Rakitha-Rajapakshe-Charith-Abeysinghe

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு (CIABOC) இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள விபரங்களின்படி, இந்த அதிர்வூட்டும் 50 கோடி ரூபா இலஞ்ச ஊழல் வழக்கு மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்த முறையான தமிழ் செய்தி வடிவமைப்பு கீழே தரப்பட்டுள்ளது: ஹரக் கட்டாவை தப்பவைக்க 50 கோடி இலஞ்சம்: பின்னணியை அம்பலப்படுத்திய ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு! ரகித மற்றும் சரித் நீதிமன்றில் ஆஜர்

June 25, 2026

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான நதுன் சிந்தக்க எனப்படும் “ஹரக் கட்டா” (Harak Kata) என்பவரைத் தடுப்புக் காவலிலிருந்து

gnasaraa

ஞானசார தேரருக்கு முறையான பொது மன்னிப்பை வழங்க வேண்டும் – ஜனாதிபதியிடம் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கோரிக்கை

June 25, 2026

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டபூர்வமான முறையில் உரிய பொது மன்னிப்பினை வழங்க நடவடிக்கை எடுக்க

nirosh

பகிரப்பட்ட மாகாண, உள்ளுராட்சி அதிகாரத்தினை சுற்றாடல் சட்டம் வாயிலாக பறிக்கப்படுகின்றது – தவிசாளர் நிரோஷ்

June 25, 2026

உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக மத்திய அரசாங்கத்தின் அதிகார சபைகள் ஊடாக பறிக்கப்படுகின்றன. மத்திய அதிகார சபைகளுக்கு அதிக சட்ட

MediaFile_20260624_064746_697

தெல்தெனிய கார் கொலைச் சந்தேக நபர் கைது: பல கோடி ரூபா திருமண மோசடிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடித் பின்னணி அம்பலம்!

June 25, 2026

கொழும்பு தெல்தெனிய மருத்துவமனைக்கு அருகில் கார் ஒன்றிற்குள் பெண் உடலியக்க மருத்துவர் (Physiotherapist) சியாமா தர்ஷனி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின்

image_62245a727f

தெல்தெனிய பெண் மருத்துவர் படுகொலை: கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாக பிரேதப் பரிசோதனையில் உறுதி!

June 25, 2026

அம்பாறை பொது மருத்துவமனையில் மருத்துவராக (Physiotherapist) கடமையாற்றி வந்த பெண் மரணம், தற்கொலை அல்ல என்பதும், அவர் கழுத்து நெரித்துக்

Screenshot_20260625_090833_Facebook

ஹரக் கட்டாவுக்கு உதவ 12 கோடி இலஞ்சம்: ரகித ராஜபக்ஷ, சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் அதிரடி கைது

June 25, 2026

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ (Rakhitha Rajapakshe) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின்

vene earth

அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்: வெனிசுலா தலைநகர் காரகாசில் கட்டிடங்கள் சரிந்து விழுந்து பேரழிவு

June 25, 2026

வெனிசுலா நாட்டின் தலைநகரான காரகாஸை சில வினாடிகள் இடைவெளியில் அடுத்தடுத்து தாக்கிய இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பல கட்டிடங்கள் இடிந்து