உண்மையை மறைக்கின்றதா நிதி அமைச்சு? – ஹர்ஷ டி சில்வா கண்டனம்

இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளுக்குச் செலுத்த வேண்டிய கடன் தவணைப் பணம் இணையவழி ஊடுருவல் மூலம் திருடப்பட்டுள்ளமை மற்றும் அது குறித்து நிதி அமைச்சு மௌனம் காப்பது நாட்டின் நிதிப் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடன் வழங்கியவர்களுக்கு ஐந்து முறை பணம் அனுப்பியும் அது போய்ச் சேராத நிலையில், நாடு ‘தொழில்நுட்பக் கடன் மீறல்’ நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ள அவர், மார்ச் மாதமே இந்த மோசடி குறித்து குழு நியமிக்கப்பட்டிருந்தும், இவ்வளவு காலம் இந்த விவகாரம் பாராளுமன்றத்திற்கு மறைக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிதி மோசடி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாராளுமன்றத்திற்கு வெளியே இந்த விடயத்தைப் பற்றிப் பேச வேண்டிய நிலை ஏற்பட்டமை உண்மையில் கவலைக்குரியதாகும். அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் என்ற முறையில், இது குறித்து பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கத் திட்டமிட்டிருந்த போதிலும், அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

திறைசேரியிலிருந்து கடன் தவணைப் பணம் செலுத்தப்பட்ட போது, இணையவழி ஊடுறுவல் ஊடாக நிதி திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்துத் தெளிவுபடுத்துமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பிய போதிலும், அக்கடிதத்துக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனால் அது தொழில்நுட்பக் கடன் மீறலாக கருதப்படும் அபாயம் உள்ளது. ஐந்து முறை பணம் செலுத்தப்பட்டும், கடன் வழங்கியவர்களுக்குச் சேராததால் அவர்கள் இது குறித்துக் கேள்வி எழுப்பிய பின்னரே இந்த விவகாரம் வெளியில் தெரியவந்துள்ளது.

அரசியலமைப்பின் 148ஆவது பிரிவின்படி, நாட்டின் நிதி மீதான முழு அதிகாரமும் நிதி அமைச்சுக்கோ அல்லது நிதிக்குழுவுக்கோ அல்ல, பாராளுமன்றத்துக்கே காணப்படுகிறது. கடந்த மூன்று சந்தர்ப்ப ங்களில் நிதி அமைச்சின் அதிகாரிகள் நிதிக்குழுவின் கூட்டங்களுக்கு சமூகமளிக்காமல் தவிர்த்து வருகின்றனர். கசினோ ஒழுங்குமுறை, 2025-ஆம் ஆண்டிற்கான நிதி அறிக்கை மற்றும் திறைசேரிக்கும் மத்திய வங்கிக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு தொடர்பான முக்கிய கூட்டங்களுக்கும் அவர்கள் சமூகமளிக்கவில்லை. நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதிக்கு இது குறித்து எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் மூன்று ஆண்டுகள் கஷ்டப்பட்டு ஈட்டிய சர்வதேச நம்பிக்கையை இத்தகைய சம்பவங்கள் சீர்குலைத்துவிடக் கூடாது. அரச கடன் மேலாண்மை சட்டத்தின்படி, புதிதாக உருவாக்கப்பட்ட கடன் மேலாண்மை அலுவலகத்தின் மூலமே இத்தகைய கொடுக்கல் வாங்கல்கள் நடைபெற வேண்டும். ஆனால், அந்த அலுவலகத்திற்கு அனுபவம் இல்லாத நபர்களை நியமிக்க வேண்டாம் எனத் நாம் ஏற்கனவே எச்சரித்திருக்கின்றோம்.

சமூக வலைதளங்களில் பரவும் தனிப்பட்ட நபர்களின் கணக்குகளுக்குப் பணம் சென்றது போன்ற தகவல்கள் குறித்துத் நான் கருத்து வெளியிட விரும்பவில்லை. பொறுப்புள்ள ஒரு பதவியில் இருப்பதால் நிதி அமைச்சின் செயலாளரின் உத்தியோகபூர்வ பதிலுக்காகக் காத்திருக்கின்றேன். மார்ச் மாதமே இது குறித்து விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இவ்வளவு காலம் இந்த விடயத்தை மறைத்து வைத்திருந்தது ஏன்? நாட்டின் நிதிப் பாதுகாப்பு மற்றும் சர்வதேச ரீதியிலான நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்ட நிதி அமைச்சின் அதிகாரிகள் உடனடியாக உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

kasal

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சி

April 24, 2026

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளில் அமைந்துள்ள நீரேந்து பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியான வானிலை காரணமாக, காசல்ரீ மற்றும்

he

இலங்கை – ஐ.நா. ஹெயிட்டி அமைதிப் படை நிலைமைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை

April 24, 2026

கரிபியன் நாடான ஹெயிட்டி வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள ‘குழு மோதல் தடுப்புப் படை’ பிரிவில் இலங்கை இராணுவத்தினரை இணைப்பது தொடர்பில்

cyb

பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல்

April 24, 2026

பொது நிர்வாக அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக

kada

கரையோரப் பிரதேசங்களில் கடலரிப்பைத் தடுப்பதற்கான ‘கல்வேலி’

April 24, 2026

கல்முனை மற்றும் மாளிகைக்காடு கரையோரப் பிரதேசங்களில் கடலரிப்பைத் தடுப்பதற்கான ‘கல்வேலி’ (Revetment) பாதுகாப்பு செயற்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கல்முனை,

Johnston-Fernando-1

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை: 4 மாதங்களின் பின்னர் விடுதலை

April 24, 2026

லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில், கடந்த நான்கு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த

arres

இரு வௌிநாட்டவர்கள் சீன சிகரட்டுக்களுடன் கைது

April 24, 2026

சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்ட விரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளியே எடுத்துச்

d

நெடுந்தீவில் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

April 24, 2026

நெடுந்தீவில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தீர்க்கப்படாத மக்களின் அடிப்படை பிரச்சனை தொடர்பான கவனயீர்புப் போராட்டம் இன்று (24) காலை

Ranil-Maithree-Wickremesinghe

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிடம் சி.ஐ.டி விசாரணை

April 24, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிடம், குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் தற்போது வாக்குமூலம்

677645448_1488683789323536_3985465687936002925_n

காணாமல் போனவர்கள் அலுவலகத்தின் சமூக அமைப்புகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உடனான கலந்தாய்வு

April 24, 2026

காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் (OMP)காணாமல் போன நபர்களுடைய குடும்பங்களினை வலுப்படுத்துவதற்கும் OMP ஆணையினை சிறப்பாக நிறைவேற்றுவதற்குமான கூட்டான்மைகளை ஏற்படுத்துவதற்கு

newindianexpress_2025-04-10_hb1r8dyb_Ramadoss-demotes

பரங்கிப்பேட்டை பாமக நிர்வாகி மீது கொடூர தாக்குதல்: ராமதாஸ் தரப்பு கடும் கண்டனம் – குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தல்!

April 24, 2026

சென்னை, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை நகர பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் கபியரசு மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பாமக தலைமை

dailythanthi_2026-04-24_w8wfgmvg_CHENNAI-10

“பானை” சின்னத்திற்கு வாக்களித்ததை வீடியோ எடுத்த திமுக நிர்வாகி: பண்ருட்டியில் அதிரடி கைது!

April 24, 2026

கடலூர், தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது தேர்தல் விதிமுறைகளை மீறி, வாக்களித்ததை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட

thenkasi last time vote election 2026

இரவு 9 மணி வரை நீடித்த வாக்குப்பதிவு! ஆலங்குளம் பூத்தில் பரபரப்பு – தென்காசியில் நடந்தது என்ன?

April 24, 2026

தென்காசி, தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 23) மாலை 6 மணியுடன் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்ட போதிலும், தென்காசி