இலவங்கப்பட்டை ஏற்றுமதி; 260 மில்லியன் டொலர் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 8,000 கோடி ரூபா) வருமானத்தை ஈட்ட முடிந்ததாக இலவங்கப்பட்டை அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் 300 மில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை அடைவதற்குத் தமது நிறுவனம் எதிர்பார்ப்பதாக அந்தத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனக லிந்தர தெரிவித்தார்.

இலவங்கப்பட்டை தயாரிப்புகளுள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது ‘இலவங்கப்பட்டை சுருள்கள்’ ஆகும். இதன் மூலம் மாத்திரம் 251 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. ஏனைய வருமானம் இலவங்கப்பட்டை பட்டை, இலைகள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் மூலம் கிடைத்துள்ளது.

இலங்கையின் வரலாற்றில் இலவங்கப்பட்டை சார்ந்த தயாரிப்புகள் மூலம் ஈட்டப்பட்ட அதிகூடிய வருமானமாக இது கருதப்படுகிறது.

இலங்கை இதற்கு முன்னர் சுமார் 70 நாடுகளுக்கு மாத்திரமே ஏற்றுமதி செய்திருந்த போதிலும், 2025 ஆம் ஆண்டில் 100 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்குத் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்துள்ளதாக ஜனக லிந்தர குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “இலங்கையின் இலவங்கப்பட்டை உலகில் ‘சிலோன் சினமன்’ (Ceylon Cinnamon) என்ற பெயரில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. அதன் சுகாதார பாதுகாப்பு மற்றும் மருத்துவ குணங்களே இதற்குக் காரணம். 2026 ஆம் ஆண்டளவில் 300 மில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை அடைய நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது