‘இலத்திரனியல் விசா விநியோக விவகாரம் ஜனாதிபதிக்கு அக்கினிப் பரீட்சை’

சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்று குறிப்பிடும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இலத்திரனியல் விசா விநியோக விவகாரம் குறித்து தனது அரசியல் சகாவான டிரான் அலஸிற்கு எதிராக முறையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஜனாதிபதிக்கு சவால் விடுக்கிறேன். ஜனாதிபதிக்கு இது அக்கினிப் பரீட்சை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டார்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிமுகப்படுத்திய நிகழ்நிலை முறைமையிலான இலத்திரனியல் விசா முறைமை தொடர்பில் கணக்காய்வினை மேற்கொள்ளுமாறு 2024.07.12ஆம் திகதி அரசாங்க நிதி பற்றிய குழு தேசிய கணக்காய்வு திணைக்களத்திடம் வலியுறுத்தியது. தேசிய கணக்காய்வு திணைக்களம் கடந்த 3ஆம் திகதி அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அரசாங்க நிதி பற்றிய குழு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு 2024.07.28ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் வழக்கை தாக்கல் செய்தோம். இந்த வழக்கில் பங்குதாரராகுமாறு மக்கள் விடுதலை முன்னணியின் மூன்று உறுப்பினர்களிடமும் வலியுறுத்தினோம். ஆனால் அவர்கள் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

அடிப்படை உரிமைமீறல் வழக்கை உயர்நீதிமன்றம் 2024.06.02ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டு இலத்திரனியல் விசா விநியோக முறைமை இடைநிறுத்தி பழைய முறைமைக்கு அமைய விசா விநியோகிக்குமாறு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் அமுல்படுத்தாத காரணத்தால் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்தோம். இந்த வழக்குக்கு அமைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு உயர்நீதிமன்றம் மூன்று வருடகால கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இலத்திரனியல் விசா முறைமை தொடர்பில் தேசிய கணக்காய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த முறைகேட்டினால் அரச வருவாய் இழக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பொறுப்புக்கூறவேண்டிய அரசியல் தரப்பினர், அரச அதிகாரிகள் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிடும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இது அக்கினி பரீட்சை என்றே குறிப்பிட வேண்டும். இலத்திரனியல் விசா முறைமை அமுல்படுத்தப்பட்டபோது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக டிரான் அலஸ் பதவி வகித்தார். உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள மனுவில் இவரது பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்று குறிப்பிடும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது அரசியல் சகாவான டிரான் அலஸிற்கு எதிராக முறையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். முடிந்தால் இதைச் செய்யுங்கள் என்று நான் ஜனாதிபதிக்கு சவால் விடுக்கிறேன்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பக்கம் பக்கமாக பேசுகிறார். சிறு சிறு ஊழல் மோசடிகளுக்கு சட்டத்தை கடுமையாக செயற்படுத்துவதை போன்று இந்த விசா விநியோகத்தால் அரசுக்கு ஏற்பட்ட பில்லியன் டொலர்கணக்கிலான நிதி குறித்தும் விசாரணைகளை நடத்தி சட்டத்தை செயற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Arrest_1

பெரும்பான்மை இன யாழ் பல்கலைக்கழக மாணவன் போதைப் பொருளுடன் கைது

November 17, 2025

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட

wat

மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் மரணம்

November 17, 2025

நேற்று ஞாயிற்றுக்கிழமை (16)ஆம் திகதியன்று மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர். எகொடஉயன பொலிஸ் பிரிவில் உள்ள எகொடஉயன

mu

சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

November 17, 2025

2020 ஆம் ஆண்டு கே. துலானி அனுபமாவை உதவி இயக்குநராக சட்டவிரோதமாக நியமித்ததாகக் கூறப்படும் வழக்கில் புவியியல் ஆய்வு மற்றும்

jup

தென்னாபிரிக்காவுக்கெதிரான 2ஆவது டெஸ்டில் கில் விளையாடுவது சந்தேகம்?

November 17, 2025

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணித்தலைவர் ஷுப்மன் கில் விளையாடுவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. முதலாவது போட்டியின்போது கழுத்து உபாதைக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை

sine

தொழில்முறை டென்னிஸ் சம்பியனான சின்னர்

November 17, 2025

தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் கூட்டமைப்பின் இறுதிப் போட்டிகள் தொடரில் இரண்டாம் நிலை வீரரான ஜனிக் சின்னர் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (16)

pri

18வது ஆண்டாக மீண்டும் பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை இளைஞர் லீக்!

November 17, 2025

தொடர்ச்சியாக 18வது ஆண்டாக, சிலோன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (பிரிமா குழுமம் இலங்கை) நிறுவனம், பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை

nl

தேசிய கால்நடை அபிவிருத்தி சபை புதிய விற்பனை நிலையங்களை திறப்பு

November 17, 2025

நாடு முழுவதும் தங்களது பண்ணை வளாகங்களில் பல புதிய விற்பனை நிலையங்களை தேசிய கால்நடை அபிவிருத்தி சபை (NLDB) திறந்துள்ளது.

fs

காதல் என்பது ‘ஒன்றும் இல்லை’ – தனுஷ்

November 17, 2025

காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் தனுஷ்ஜி என்று இந்தி செய்தியாளர்கள் ஆர்வமாக கேட்க, அவர் சொன்ன பதில் தான் அனைவரையும்

sk26

SK26 படம்; சிவகார்த்திகேயன் -வெங்கட் பிரபு

November 17, 2025

கங்கை அமரன் சமீபத்தில் SK26 படம் குறித்து பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் SK26 திரைப்படம்

roj

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் ரோஜா

November 17, 2025

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் ரோஜா. அரசியலில் ஈடுபட்டு வரும் அவர் முதல்வர் பதவிக்கு வருவது

theep

விஜயகாந்த் பட நடிகை: பெரிய வீட்டு மருமகள்?

November 17, 2025

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா சகோதரரின் மருமகள் தீப்தி பட்நாகர் பற்றி சினிமா ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தீப்தி தமிழ் படங்களிலும்

ma

‘மாஸ்க்’ படத்துக்கு திடீர் சிக்கல்…

November 17, 2025

கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் வரும் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஜிவி