பாகிஸ்தான் கடற்றொழில் மற்றும் (பெட்ரல் ) உள்ஆட்சி அமைச்சர் மொஹமட் ஜனைத் சவுத்திரி இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ளார் .
அமைச்சர் மொஹமட் ஜனைத் சவுத்திரி இன்று செவ்வாய்க்கிழமை (09) கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.
இலங்கை-பாக்கிஸ்தான் சுதந்திரமடைந்த காலத்திலிருந்து நட்புறவைக் கொண்டுள்ள நாடு, இலங்கை ஊடகவியலாளர்கள் பாக்கிஸ்தான் நாட்டுக்கு வருகைதருமாறு அழைப்பு விடுத்தார்.
அத்துடன் கடந்த வாரம் இலங்கையில் ஏற்பட்ட போரிடரினால் இலங்கைக்கு பாகிஸ்தான் உடனடி நிவாரணங்களை உடன் வழங்கியது. பாக்கிஸ்தான் பிரதமர் மற்றும் இலங்கைக்கு உடனடி நிவாரணங்களையும் தொடர்ந்து வழங்கி வருகின்றது.
ஏற்கனவே பாக்கிஸ்தான் விமானம் மூலமும் 200 டொன் உடன் நிவாரணப் பொருட்கள் கடல் மார்க்கமாக பாலங்கள், வள்ளங்கள், பிளங்கெட், கூடாரங்கள் பாய்கள் நுளம்பு வலைகள், பால் பெட்டிகள் மருந்துப் பொருட்களை உடனடி நிவாரணமாக வழங்கி வைத்தது. அத்துடன் பாகிஸ்தான் இரானுவ குழு ஒன்றும் இவ் நிவாரணப் ப ணிகளிளல் இலங்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரும் கலந்து கொண்டார்.