‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிவாரண நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு மேலதிகமாக யூரோ ஒரு மில்லியனை மனிதாபிமான உதவியாக ஒதுக்கியுள்ளது.
மனிதாபிமான பங்காளர்களுடன் இணைந்து வழங்கப்படும் இந்த உதவி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை சேவைகளை வழங்க பயன்படுத்தப்படும்.
‘டித்வா’ சூறாவளிக்குப் பிறகு, பொறியியல், தொழில்நுட்ப உதவி மற்றும் பொருள் உதவி உட்பட, ஐரோப்பிய ஒன்றியமும் அதன் பங்காளர்களும் இதற்கு முன்னர் இலங்கை மக்களுக்கு 2.35 மில்லியன் யூரோவை உதவியாக வழங்கியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் உலகின் முன்னணி மனிதாபிமான உதவி வழங்குநர்களாக செயற்படுகின்றனர்.
உலகளவில் மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களைச் சமாளிக்க உதவுவதும், பேரழிவுகள் மற்றும் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களின் நேர்மை மற்றும் மனித கண்ணியத்தைப் பாதுகாப்பதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நோக்கங்களாகும்.