இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இன்றைய தினம் கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகமான சௌமிய பவனில் ஊடக சந்திப்பு ஒன்று நடத்தினார்.
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 4 லட்சம் குடும்பங்களுக்கு, மறைந்த முன்னாள் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் நினைவாக – “சௌமிய தான யாத்திரா” என்ற திட்டத்தினூடாக, வடக்கில் பருத்தித் துறையில் இருந்து தெற்கில் தெய்வேந்திர முனைவரை உள்ள அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் உலர் உணவு நிவாரண பொதியை வழங்க இருப்பதாக இதன்போது தெரிவித்தார்.
By C.G.Prashanthan