இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவு செய்யப்பட்டார்.
இதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் நெல்லியடி பகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சியியின் சுமந்திரன் அணி இனிப்பு வழங்கியும், வெடி கொழுத்தியும் கொண்டாடியுள்ளது.
குறித்த அணி இளைஞர்கள் பொதுமக்கள், மற்றும் பயணிகள், வியாபாரிகளுக்கு இனிப்பு பண்டங்களை வழங்கி கொண்டாடியுள்ளனர்.
இதன்போது, சாணக்கியனின் அரசியல் செயல்பாடுகள், மற்றும் தலைமைக் குணங்களைப் பாராட்டும் வகையிலான கருத்துகள் இளைஞர்களால் வெளியிடப்பட்டன.