இலங்கை – இந்திய கலாசார ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கலாசார ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், தற்போது நடைமுறையிலுள்ள பல கலாசாரத் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை அப்பகுதி மக்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிப்பது மற்றும் அதன் எதிர்காலப் பராமரிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இலங்கையிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரிய நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் மயமாக்குவதற்கு இந்தியா வழங்கவுள்ள ஒத்துழைப்புகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை கலாசார ரீதியாக அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கு இந்தச் சந்திப்பு வழிவகுத்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

NAMAL

அரசு தனது தோல்விகளையும் முறைகேடுகளையும் மறைப்பதற்காக பொய்களைக் கூறி எதிர்க்கட்சியினர் மீது பழிசுமத்துகின்றது – நாமல் எம்.பி

March 23, 2026

தேசிய மக்கள் சக்தி அரசு தனது தோல்விகளையும் முறைகேடுகளையும் மறைப்பதற்காக பழைய பொய்களைக் கூறி எதிர்க்கட்சியினர் மீது பழிசுமத்துகின்றது என்று

chan

நோயாளர் காவு வண்டி தட்டுப்பாட்டினால் பறிபோன உயிர்; வட்டுக்கோட்டையில் சம்பவம்

March 23, 2026

நோயாளி ஒருவரை யாழ். போதனைக்கு கொண்டு செல்வதற்கு நோயாளர் காவு வண்டி இல்லாத காரணத்தால் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம்

blas

முன்னாள் ஆட்சியாளர்களுக்குத் தெரிந்தே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் நடத்தப்பட்டனவா?

March 23, 2026

முன்னாள் ஆட்சியாளர்களுக்குத் தெரிந்தே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் நடத்தப்பட்டனவா என்று சமூக மற்றும் சமய மையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை

police

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

March 23, 2026

திருகோணமலை- உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னியா காட்டுப்பகுதியில் இரகசியமான முறையில் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றை பொலிஸார்

in sl

இலங்கை – இந்திய கலாசார ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

March 23, 2026

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கலாசார ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, கொழும்பிலுள்ள இந்திய

mara

மரப்பலகைகளின் நடுவில் மகோகனி பலகைகளை கடத்தி சென்றவர்கள் கைது

March 23, 2026

சப்பு மற்றும் இலவன் மரப்பலகைகளின் நடுவில் மிகவும் சூட்சுமமான முறையில் நுட்பமாக மறைத்து பல லட்சம் ரூபா பெறுமதியான மவோகனி

Vijay

கனடா – பிரம்ப்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவிடம் சேதம்!

March 23, 2026

பிரம்ப்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவிடம் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டு நான் மிகவும் மனம் வருந்துகின்றேன் என்று ஒன்டாரியோ மாகாண நாடாளுமன்ற

mari

சந்தையில் அரிசி முதல் மீன் வரை விலை உயரும் அபாயம்

March 23, 2026

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால், சந்தையில் ஏனைய அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் கணிசமாக உயரும் என்று ஐக்கிய மக்கள்

aut

முச்சக்கர வண்டி ஒன்றில் தீ விபத்து

March 23, 2026

மூதூர் – அறபாநகர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) முச்சக்கர வண்டி ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பூரிலிருந்து

arrest

ஐஸ் போதைப்பொருளுடன் யுவதி கைது!

March 22, 2026

களனி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த

schoo

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு; பாடசாலைகளை மூடத் தீர்மானமில்லை!

March 22, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக, எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் நோக்கில் பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம்

Accident

இரத்தினபுரி பிரதான வீதியில் விபத்து: ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்!

March 22, 2026

ஹொரணை – இரத்தினபுரி பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.