இலங்கை – இத்தாலி சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் புதுப்பிப்பு

இத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இது தொடர்பான ஒப்பந்தம் இத்தாலியின் ரோம் நகரில் கையெழுத்திடப்பட்டது.

இலங்கை அரசாங்கம் சார்பில் இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் சத்யா ரொட்ரிகோவும், இத்தாலி அரசாங்கம் சார்பில் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான பிரதி அமைச்சரும் அரச செயலாளருமான மரியா திரிபோடியும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

2021 ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் காலாவதியாகியிருந்த நிலையில், அது முதல் இரு நாடுகளின் மோட்டார் வாகனப் போக்குவரத்து அதிகாரிகளுக்கிடையில் ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து இக்கையெழுத்திடல் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தத்தின் மூலம், இரு நாடுகளிலும் நிரந்தர வதிவிடத்தைப் பெற்றுக்கொண்ட நபர்கள் தமது செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரத்தை மாற்றிக்கொள்ள வசதி அளிக்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் முதன்முறையாக 2011 ஆம் ஆண்டு இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டதோடு, 2021 இல் காலாவதியாவதற்கு முன்னதாக 2016 இல் புதுப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டதன் மூலம், குறித்த நாடுகளில் வசிக்கும் பிரஜைகள் 6 வருட காலப்பகுதிக்குள் எழுத்துமூல மற்றும் செய்முறைப் பரீட்சைகளுக்குத் தோற்றாமல் தமது சாரதி அனுமதிப்பத்திரத்தை மாற்றிக்கொள்ளும் வாய்ப்புக் கிட்டுகிறது.

இந்த வசதியானது இத்தாலியில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இலங்கையர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

5 வருட காலத்திற்குச் செல்லுபடியாகும் இந்த ஒப்பந்தம், இரு நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் 60 நாட்களுக்குள் நடைமுறைக்கு வரும். ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததும் இரு தரப்பினரும் அது குறித்து அறிவிப்பார்கள் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

lax

லக்சபான தேயிலை தொழிற்சாலையின் மீள் புனரமைப்பு பணிகள் தீவிரம்

December 14, 2025

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான மஸ்கெலியா–லக்சபான தேயிலை தொழிற்சாலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி நள்ளிரவில் ஏற்பட்ட திடீர்

high

‘தித்வா’ சூறாவளி அனர்த்தத்தில் மக்கள் உயிரிழந்தமைக்கு அரசாங்கமே பொறுப்பு ; உயர் நீதிமன்றில் எதிர்க்கட்சிகள் வழக்கு

December 14, 2025

‘தித்வா’ சூறாவளி அனர்த்தத்தில் மக்கள் உயிரிழந்தமைக்கு முன்னெச்சரிக்கைகளை அரசாங்கம் உரிய முறையில் கவனத்தில் கொள்ளத் தவறியதே காரணம் எனக் குற்றம்

van

ஆற்றில் கவிழ்ந்த வேன்

December 14, 2025

வெலிகந்த, கினிதம கிராமத்தில் இருந்து வெலிகந்த நகரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று இசெட் டீ ஆற்றுக்கு விழுந்துள்ளதுடன்

ell

சுனாமியில் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு நிவாரணம் அனுப்பினோம்

December 14, 2025

தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாடு இருந்த காலத்தில் 10-15 லொறிகளில் சுனாமியில் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு தாம் நிவாரணம் அனுப்பியதாக

ris

ரிட்ஸ் கார்ல்டன் அதி சொகுசு கப்பல் கொழும்பு வருகை

December 14, 2025

ரிட்ஸ் கார்ல்டன் (Ritz Carlton) வலையமைப்பிற்குச் சொந்தமான அதி சொகுசு கப்பல் ஒன்று, 400 பேருடன் இன்று (14) கொழும்பு

sss

யூத அவுஸ்திரேலியர்கள் மீதான தாக்குதல் தீவிரவாத சம்பவமாக அறிவிப்பு!

December 14, 2025

சிட்னியின் பாண்டி கடற்கரையில் ஒரு யூத ஹனுக்கா கொண்டாட்டம் நடந்தபோது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, மொத்தம் இரண்டு

19

நிவாரணம் இல்லையாயின் 1904 க்கு அழைக்கவும்

December 14, 2025

நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதில் அல்லது அத்தியாவசிய சேவைகள் கிடைக்காததில் பொதுமக்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், ‘1904’ என்ற ஹாட்லைன் மூலம்

thesa

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்

December 14, 2025

யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் இன்றைய (14) தினம் தேசத்தின் குரல் என தமிழ் மக்களால் அழைக்கப்படும் அன்ரன்

kank

காங்கேசந்துறை இந்து மயானத்தை மீட்டு தருவதாக உறுதி!

December 14, 2025

காங்கேசன்துறை இந்து மயானத்தை விடுவித்து தருமாறு அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ,நாடாளுமன்ற உறுப்பினர்

CEB

நெருக்கடியில் இலங்கை மின்சார சபை!

December 14, 2025

இலங்கை மின்சாரசபை அனர்த்தநிலை காரணமாக சுமார் 20 பில்லியன் ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும், தடைப்பட்ட மின்சார விநியோகத்தில்

444

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இலங்கை வந்த அமெரிக்க மற்றும் இந்திய விமானங்கள் நாட்டை விட்டு புறப்பட்டன!

December 14, 2025

எமது நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு என்பன ஏற்பட்டது இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் மற்றும்

mano2

பேரவலத்துக்கு பின்னர் எழுந்துள்ள “பாதுகாப்பான வதிவிட காணித்தேவை ” மலையக பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்பட தயார் – மனோ கணேசன்

December 14, 2025

மலைநாட்டில், இந்த பேரவலத்துக்கு பின்னர் எழுந்துள்ள, “பாதுகாப்பான வதிவிட காணி” என்ற உரிமை கோரிக்கையை அரசுடன் உரையாடி பெற அரசாங்கத்தில்