இலக்கியத்திற்கான நோபல் பரிசு இம்முறை ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத்துக்கு மத்தியிலும் கலையின் சக்தியை உறுதிப்படுத்தும் எழுத்தாளரின் கவர்ச்சியான தொலைநோக்குப் பார்வை கொண்ட பணிக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.
லாஸ்லோ 1954ல் ஹங்கேரியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கியூலா என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். இவரது முதல் நாவல்(Satantango, 2012) 1985ல் வெளியானது.
அவர் எழுதிய ‘ஹெர்ஷ்ட் 07769’(Herscht 07769) என்ற நாவல், சமூக அமைதியின்மையை துல்லியமாக சித்தரிப்பதால் ஒரு சிறந்த சமகால நாவலாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
லாஸ்லோ கிராஸ்னா ஹோர்காய் ஐரோப்பாவின் ஒரு சிறந்த எழுத்தாளர் என்று நோபல் பரிசுக் குழு பாராட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.