சுமார் 90 கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக இரத்னபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று அடுக்குகளை கொண்ட இந்த சந்தை வளாகத்தின் இரண்டாவது மாடியிலேயே இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இங்கு சில்லறை மற்றும் மொத்த விலையில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் அரிசி, பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பல கடைகள் தீயினால் முற்றாக அழிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இரத்னபுரி மாநகர சபை மற்றும் பலாங்கொடை நகர சபை ஆகியவற்றின் தீயணைப்புப் பிரிவினர் இணைந்து செயற்பட்டனர்.