விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் ரிலீஸ் ஆகி இருந்த தலைவன் தலைவி படம் பெரிய ஹிட் ஆகி இருந்தது.
நல்ல வசூலை குவித்து இருந்த இந்த படத்தை பசங்க புகழ் இயக்குனர் பாண்டிராஜ் தான் இயக்கி இருந்தார்.
இந்நிலையில் பாண்டிராஜ் அடுத்து யாருடன் கூட்டணி சேர போகிறார் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் ஹரிஷ் கல்யாணை தான் பாண்டிராஜ் அடுத்து இயக்க போகிறாராம். இது இரண்டு ஹீரோ கதை என்றும் கூறப்படுகிறது. இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.