இயக்குநர் அபிஷனின் வித் லவ்; விமர்சனங்கள்!

இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நடிகர் அவதாரம் எடுத்திருக்கும் வித் லவ் படம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் என்ன பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

இயக்குநர், ஹீரோ: சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கோலிவுட்டுக்கு கிடைத்த இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். சின்ன பையனாக இருந்து கொண்டு என்ன அழகாக படம் எடுத்திருக்கிறார் என்று அவரை பாராட்டாதவர்களே இல்லை. திரையுலக பிரபலங்கள் எல்லாம் அபிஷன் ஜீவிந்தை நேரில் அழைத்து பாராட்டினார்கள்.

டூரிஸ்ட் ஃபேமிலியை அடுத்து அபிஷன் என்ன செய்யப் போகிறார் என்று அனைவரும் காத்திருந்த நிலையில் யாரும் எதிர்பாராவிதமாக ஹீரோவாகிவிட்டார் .

வித் லவ் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார் அனஸ்வரா ராஜன். புதுமுகங்களாக சேர்ந்து உருவாக்கியிருக்கும் வித் லவ் படத்தை தயாரித்திருக்கிறார் சவுந்தர்யா ரஜினிகாந்த். அந்த படம் சென்சார் போர்டுக்கு சென்று சான்று பெற்று ரிலீஸாகியிருக்கிறது.

வித் லவ் படத்தை பார்ப்பவர்கள் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, ஹீரோ, ஹீரோயின், இயக்குநர் கூட்டணி புதிதாக மட்டும் அல்ல நன்றாகவும் இருக்கிறது. அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது. பள்ளி காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது படம். முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார் அபிஷன் ஜீவிந்த். இயக்குநராச்சே அதனால் அவர் நன்றாக நடித்திருப்பதை பார்த்து ஆச்சரியம் இல்லை. அனஸ்வரா ராஜன் அழகாக இருக்கிறார், க்யூட்டாக நடிக்கவும் செய்திருக்கிறார்.

முதல் பாதியை விட இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது. ஷான் ரோல்டனின் இசை ரசிக்கும்படி இருக்கிறது. புதுமுக இயக்குநர் மதன் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். சும்மா ஜாலியாக, ரிலாக்ஸாக ஒரு காதல் படம் பார்க்கணும் என்றால் வித் லவ் படம் பார்க்கலாம். கதை புதிது இல்லை என்றாலும் அதை நம்மை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குநர். பள்ளிக் காட்சிகள் அதிகம் கவர்கிறது. தியேட்டரில் இருந்து வெளியே வரும்போது முகத்தில் சிரிப்பு இருக்கிறது. 96 படம் மற்றும் பிரேமலுவை கலந்து கொடுத்தது போன்று உள்ளது. செம ஃபன். மனம் விட்டு சிரிக்க வைக்கிறது படம் என்று தெரிவித்துள்ளனர்.

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்

kolla

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

March 3, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக்

sunna

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

March 3, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (02)

minn

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

March 3, 2026

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை

Dau

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் மதுபான விற்பனை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து

March 3, 2026

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களில் உள்ள மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும்

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –

cid

குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட பணிப்புரை

March 3, 2026

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்

nali

அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 3, 2026

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு