இம்ரான் கானை வேறு சிறைக்கு மாற்ற பாகிஸ்தான் அரசு முடிவு

தொடர் போராட்டம் காரணமாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை வேறு சிறைக்கு மாற்றம் செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தானில் 2018 – 2022 வரை பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இவர், பெரும்பான்மை இல்லாததால், 2022 ஏப்ரலில் பிரதமர் பதவியை இழந்தார். புதிதாக பதவியேற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, இம்ரான் கான் மீது, 100க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்தது.

ஊழல் புகாரில் தண்டிக்கப்பட்டு, 2023ம் ஆண்டு ஆகஸ்ட் முதல், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அவர் அடைக்கப்பட்டு உள்ளார். நீதிமன்ற ஆணை இருந்தும், இம்ரான் கானை சந்திக்க அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இம்ரான் கான் சித்ரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் பரவின. ஆனால், அடியாலா சிறை நிர்வாகம் அதை திட்டவட்டமாக மறுத்தது. இதனிடையே, சிறை நிர்வாகம் மற்றும் பாகிஸ்தான் அரசைக் கண்டித்து தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியினர் சிறை முன்பாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்பிறகு, சிறையில் உள்ள இம்ரான் கானை, அவரது சகோதரி உஸ்மா கான் சந்திக்க அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவர் தனிமைப்படுத்தப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், முப்படை தளபதி அசிம் முனீர் தான் இம்ரான் கானுக்கு நேர்ந்த கொடுமைக்கு காரணம் என்று குற்றம்சாட்டினார்.

நேற்று முன்தினம் இம்ரான் கானை சந்திக்க அனுமதி மறுத்த சிறை நிர்வாகத்தைக் கண்டித்து அவரது சகோதரி, வழக்கறிஞர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சிறை வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தைக் கலைக்குமாறு சொல்லியும், அவர்கள் கலைந்து போக மறுத்தால், தண்ணீரை பீய்த்து அடித்தனர். மேலும், அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில், தொடர் போராட்டம் காரணமாக, அடியாலா சிறையில் இருந்து, இம்ரான் கானை வேறு சிறைக்கு மாற்றம் செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டோக் மாவட்ட சிறைக்கு அவரை மாற்றவே, அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கொழும்பு புனித பேதுருவானவர் கல்லூரி “Colours Night 2025”

December 13, 2025

கொழும்பு 04, புனித பேதுருவானவர் கல்லூரியின் (St. Peters college) விளையாட்டு வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ‘Colours Night

அமைதி நோபல் பரிசு வென்ற நர்கெஸ் முகமதி கைது

December 13, 2025

2023 ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசை வென்ற மனித உரிமைப் போராளி நர்கெஸ் முகமதியை, ஈரானிய பாதுகாப்புப் படையினர்

கல்முனை விபத்தில் 650 கோழிகள் உயிரிழப்பு

December 13, 2025

ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் புதுக்குடியிருப்பில் கோழிகளை ஏற்றிவந்த லொறி வீதியின் நடுவே படுத்திருந்த கட்டாக்கில் மாடுகளுடன்

nor

ஹட்டன் – நோர்டன்பிரிட்ஜ் வீதியில் புதிய இரும்புப் பாலம்

December 13, 2025

ஹட்டன் – நோர்டன்பிரிட்ஜ் பிரதான வீதியின் காசில்ரீ பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்தமையால் தடைப்பட்டிருந்த போக்குவரத்து, இன்று முதல்

ar

நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

December 13, 2025

வெளிநாடுகளிலிருந்து வழங்கப்பட்ட உதவிகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள ஒருகொடவத்தையில் அமைந்துள்ள அனர்த்த நிவாரண சேவை களஞ்சிய வளாகத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற

அரசாங்கத்தால் உள்நாட்டு, வெளிநாட்டு உதவிகள் திருடப்படாது என்ற நம்பிக்கை உள்ளது – ஓமல்பே சோபித தேரர்

December 13, 2025

தட்சிண லங்கையின் பிரதான சங்கநாயக்க தேரர் ஓமல்பே சோபித தேரர், சுனாமி நிவாரண உதவிகளைத் திருடிய ஆட்சியாளர்கள் இருந்ததாகவும், கோவிட்

இரவில் நுவரெலியாவுக்கு செல்ல வேண்டாம்?

December 13, 2025

நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும் இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட செயலாளர்

மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டு வரும் இலங்கை விமானப்படை

December 13, 2025

சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் பல பிரதேசங்கள் வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான

kada

சிலாபத்தில் கடத்தப்பட்ட 1740 kg பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்!

December 13, 2025

இலங்கை கடற்படையினர், நேற்றுமுன்தினம் சிலாபம் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட

kil

இயற்கைப் பேரிடரை பயன்படுத்தி இடம்பெறும் பகல் கொள்ளை!

December 13, 2025

அண்மையில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரை பயன்படுத்தி இடம்பெறும் பகல் கொள்ளையைத் தடுத்து நிறுத்துமாறு, கிளிநொச்சி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர்

naga

நாகர் கோவில் மக்கள் விசனம்

December 13, 2025

வடமராட்சி கிழக்கு-நாகர் கோவில் பகுதியில் பணிபுரியும் கிராம உத்தியோகத்தர் பக்கச்சார்பாக செயற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு

ja was

வடமராட்சி கிழக்கு கடற்கரை வீதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் நோய் பரவும் அபாயம்!

December 13, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்கரை வீதிகளில் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றது. அண்மையில் இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய டித்வா புயலால் வடமராட்சி