உலக கோப்பை தொடரில் இன்று இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. காலிறுதி போன்ற இந்த சவாலில் வெல்லும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு அதிகம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.
இன்று நவி மும்பையில் நடக்கும் லீக் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இரு அணிக்கும் காலிறுதி போன்ற இந்த மோதலில், வெல்லும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு அதிகரிக்கும்.