இணையவழியில் இளைஞர்களை ஆசைக்காட்டி இணங்கவைத்தமை (luring) மற்றும் சுரண்டலுக்கு உட்படுத்தியமை தொடர்பான விசாரணை ஒன்றைத் தொடர்ந்து, மார்க்கம் (Markham) நகரைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் ஒருவர் மீது பீல் பிராந்திய காவல்துறையினர் (Peel Regional Police) குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதிக்கும் 2026 ஆம் ஆண்டின் முற்பகுதிக்கும் இடைப்பட்ட காலத்தில், பல சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்தி, தன்னை ஒரு வயது குறைந்த சிறுவனாகக் காட்டி 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் தொடர்புகொண்டுள்ளதாகப் புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவ்வாறு அவர்களின் அநாகரீகமான புகைப்படங்களைப் பெற்றுக்கொண்டு, பின்னர் பாலியல் நோக்கங்களுக்காகப் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டியதாகக் (extort) காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் பின்வரும் பயனர் பெயர்களில் (usernames) கணக்குகளை இயக்கியதாகக் கூறப்படுகிறது:
-
ஸ்னாப்சாட் (Snapchat): nicovalentino23
-
இன்ஸ்டாகிராம் (Instagram): Forgiveme1236
-
அரட்டைகளில் (chats) பயன்படுத்திய புனைபெயர்: கேஷான் (Keshawn)
மார்க்கத்தைச் சேர்ந்த 24 வயதுடைய சுகின் மோகனதாஸ் (Sugin Mohanathas) என்பவர் கைது செய்யப்பட்டு, பின்வரும் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளார்:
-
18 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தையை ஆசைக்காட்டி இணங்கவைத்தல்
-
16 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தையை ஆசைக்காட்டி இணங்கவைத்தல்
-
16 வயதுக்குட்பட்ட ஒருவருக்குப் பாலியல் ரீதியான அநாகரீக ஆவணங்களை கிடைக்கச் செய்தல்
-
மிரட்டிப் பணம் பறித்தல் (Extortion)
-
குழந்தை பாலியல் துஷ்பிரயோக ஆவணங்களை வைத்திருத்தல்
இவரால் பாதிக்கப்பட்ட மேலும் சில நபர்கள் இருக்கக்கூடும் எனப் புலனாய்வாளர்கள் நம்புவதுடன், இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு ஊக்கப்படுத்துகின்றனர்.
இக்குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பதுடன், குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதியாகவே கருதப்படுவார்.