மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் சில இடங்களில் சுமார் 75 மில்லி மீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.