ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிய புதிய பயணம்!

காத்தான்குடி மக்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிய பயணம் என்ற நீண்ட கால வேலை திட்டத்தினை காத்தான்குடி பிரதேசத்தில் அமுல்படுத்துவது சம்பந்தமான விசேட கலந்துரையாடல் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) ஊர் வீதி மஞ்சந் தொடுவாயில் அமைந்துள்ள அப்ரார் நிலையத்தில் நடைபெற்றது.

அண்மையில் எமது றைஸ் ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட காத்தான்குடியில் இள வயது மரணம் தொடர்பான ஆய்வின் முடிவினை Dr. அஸ்மி ஹசன் Consultant Physician தள வைத்தியசாலை அக்கரைப்பற்று, காத்தான்குடி மக்கள் எதிர்கொள்ளும் ஆரோக்கிய ரீதியான சவால்கள் என்ற தலைப்பில் Dr. MSM நுசைர் Consultant Physician தள வைத்தியசாலை காத்தான்குடி Presentation ஊடாக கருத்துக்களை வழங்கினர்.

கலந்து கொண்ட பங்காளர்களின் Stakeholders கவனக்குவிப்பை பெற்ற இரண்டு வைத்திய நிபுணர்களின் கருத்துக்கள் Suggestions எமது ஊரில் மிக அவசரமாக தலையிட்டு கூட்டாக உழைக்க வேண்டிய விடயங்கள் என்பதில் சகலரும் உடன்பாடாக கருத்துக்களை தெரிவித்தனர்.

இறுதி நிகழ்வாக இரண்டு வைத்திய நிபுணர்களின் கருத்தை மையப்படுத்திய பேச்சிலிருந்து நடைமுறைக்கு பங்காளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வினை றைஸ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவர் KMM நவாஸ் அவர்கள் நெறிப்படுத்தினார்கள்.

எதிர்காலத்தில் எமது ஊரில் காத்தான்குடி நகர சபை பிரதேச செயலகம் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் வர்த்தக சங்கம் பெண்கள் அமைப்புகள் பள்ளி வாயில்கள் சமூக நிறுவனங்கள் ஆகியன இணைந்து கூட்டாக காத்தான்குடி மக்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் உழைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய தோடு ஒவ்வொரு நிறுவனங்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் நெறிப்படுத்தினார்.

இது சம்பந்தமாக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பொறுப்புக்கள் Action plan ஊடாக ஒவ்வொரு நிறுவனமும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் உடனடியாக செய்ய வேண்டிய நீண்ட காலத்தில் செய்ய வேண்டிய சிறிய அளவிலான மற்றும் பெரிய அளவிலான திட்டங்களை இந்நிகழ்வில் முன்மொழிந்தனர் இதனை எதிர்காலத்தில் கூட்டாக எல்லோரும் இணைந்து அமுல்படுத்துவது எனவும் தீர்மானித்தனர்.

இந்த நிகழ்வில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் அல்ஹாஜ் SHM அஸ்பர் காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் M.S சில்மியா காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி UL. நசூர் தீன் காத்தான்குடி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுவின் இனணப்பாளர் MBM பிர்தௌஸ் நளீமி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஜம்மியத்தில் உலமா பிரதிநிதிகள் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மருத்துவத்துறை சார்ந்தோர் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சட்டத்தரணிகள் கல்வியலாளர்கள் பொறியியலாளர்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகள் பிரதேசத்தின் விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் றைஸ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் ஆகியோர்கள் உட்பட நிகழ்வில் தெரிவு செய்யப்பட்டு அழைக்கப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

றைஸ் ஸ்ரீலங்கா நிறுவனம் தொடர்ந்தும் இவ்வேளை திட்டத்தின் ஏற்பாட்டாளராக Convener ஒருங்கிணைப்பாளராக செயல்படும் என்பதுடன் தேவையான தொழில்நுட்ப அறிவினை இந்த இரண்டு வைத்திய நிபுணர்களின் உதவியுடன் மற்றும் ஏனைய மருத்துவத்துறையைச் சேர்ந்த தொழில்சார் நிபுணர்களின் உதவியுடன் வழங்க இந்நிகழ்வில் உடன்பாடு காணப்பட்டது.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.