ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அசத்திய ஜிம்பாப்வே அணி இன்னிங்ஸ், 73 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே சென்ற ஆப்கானிஸ்தான் அணி, ஒரே ஒரு டெஸ்டில் விளையாடியது. ஹராரேயில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 127, ஜிம்பாப்வே 359 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 34ஃ1 ரன் எடுத்திருந்தது.
ஆப்கானிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 159 ரன்னுக்கு சுருண்டு, இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. யாமின் அஹமத்சாய் (13) அவுட்டாகாமல் இருந்தார். ஜிம்பாப்வே சார்பில் ரிச்சர்டு 5, முசரபானி 3, சிவாங்கா 2 விக்கெட் சாய்த்தனர். ஆட்ட நாயகன் விருதை ஜிம்பாப்வேயின் பென் கர்ரான் (121 ரன்) வென்றார்.