அவசரகால சட்டம் திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் பயன்படுத்தப்படவில்லை!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் அவசரகால சட்டத்தின் பிரகாரம் பௌத்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று எதிர்கட்சியினர் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. சாதாரண சட்டத்தின் பிரகாரமே அந்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

பொதுச்சட்டத்தின் பிரகாரமே உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகிறார் அவ்வாறாயின் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது யார்? தேங்காய் உடைத்தது யார் ?கல்வி ஆபாசம் என்று குறிப்பிட்டது யார்? என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்றத்தில் காலையில் அடிப்படையற்ற விடயங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை பிரதான பழக்கமாக எதிர்க்கட்சியினர் கொண்டுள்ளனர். எதிர்க்கட்சியின் ஒருசில சிரேஷ்ட உறுப்பினர்கள் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதையிட்டு கவலையடைகிறேன்.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் அவசரகால சட்டத்தின் பிரகாரம் பௌத்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று எதிர்கட்சியினர் உறுப்பினர் குறிப்பிட்டார். இது முற்றிலும் தவறானது.

போலியானது. சாதாரண சட்டத்தின் பிரகாரமே அந்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள். பொதுச்சட்டத்தின் பிரகாரமே உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆகவே எதிர்க்கட்சியினர் ஏன் இவ்வாறு பொய்யுரைக்கிறார்கள்.

அதேபோல் அவசரகால சட்டத்தை பயன்படுத்தி ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று குறிப்பிடுகிறார்கள். எந்த ஊடகத்துக்கு எதிராக , என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை எதிர்க்கட்சியினர் குறிப்பிட வேண்டும்.

எந்த போராட்டத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தோம் என்பதை எதிர்க்கட்சி குறிப்பிட வேண்டும். மக்களை தவறாக வழிநடத்தும் விடயங்களையே குறிப்பிடுகிறார்கள்.

புதிய கல்வி மறுசீரமைப்பு நீக்கப்படவில்லை. தற்காலிகமாகவே பிற்போடப்பட்டுள்ளது. ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் தவறுகளை திருத்திக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாங்கள் எதனையும் மூடிமறைக்கவில்லை.

எதிர்க்கட்சியினர் தான் இவ்விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டில் உள்ளார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் கல்வி மறுசீரமைப்புக்கு பாரியதொரு எதிர்ப்பை ஏற்படுத்தி தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தினார்கள். தற்போது தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.

எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையாயின் யார் போராட்டங்களை நடத்தியது, யார் கதிர்காமத்துக்குச் சென்று தேங்காய் உடைத்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரன தொகுதி அமைப்பாளர் தேங்காய் உடைக்கும் நடவடிக்கையை ஏற்பாடு செய்தார்.

கதிர்காமத்தில் தேங்காய் உடைக்கும் போது ‘ என்னை வீடியோ எடுக்க வேண்டாம், அந்த பக்கம், அந்த பக்கம்’ என்று சொன்னதை முழு நாடும் பார்த்தது.

புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிராக பிரதேச மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் எதிர்ப்புக்களை தோற்றுவிக்கவில்லையா, கல்வி ஆபாசமாக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடவில்லையா, கல்வி ஆபாசமானது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் தெளிவுப்படுத்த வேண்டும். ஆரோக்கியமான கருத்துக்களுக்கும், கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியும். அதனை விடுத்து வதந்திகள் பற்றி பேசுவது பயனற்றது என்றார்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்