அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றுக்கு இன்று திங்கட்கிழமை (15) அறிவித்துள்ளது.
அதிக விலை பெறுமதிகளின் கீழ் உடனடி விலைமனுக்கோரலை செயற்படுத்தியதன் மூலம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்தின் சந்தேகநபராக முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பெயரிடப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அர்ஜுன ரணதுங்கவை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.