அரசுகளாலும் வல்லரசுகளாலும் தமிழர்கள் இன்றும் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர்

இலங்கைத்தீவு சர்வதேச வல்லரசுகளின் பூகோள ஆதிக்கப் போட்டிக்குள் சிக்குண்டுள்ளதால், அரசுகளாலும் வல்லரசுகளாலும் தமிழர்கள் இன்றும் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த. சுரேஷ் தெரிவித்தார்.

தியாக தீபம் அன்னை பூபதியின் 38-வது நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு நாவலடியில் உள்ள அவரது நினைவுத் தூபியில் நேற்று வியாழக்கிழமை (19) சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வின் தொடக்கத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:

இலங்கையில் சிங்களப் பேரினவாத அடக்குமுறைக்கு எதிராகத் தமிழர்கள் தங்களது தாயக நிலப்பரப்பில் சுதந்திரமாக வாழப் போராடி வந்தனர். அந்தச் சூழலில் அமைதியை நிலைநாட்ட வந்த இந்திய அமைதி காக்கும் படை (IPKF), தனது நோக்கத்திற்கு மாறாகத் தமிழ் மக்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

அக்காலப்பகுதியில், இந்திய இராணுவத்தின் கைதுகள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்புணர்வுகள் போன்ற அத்துமீறல்களை நிறுத்தக் கோரி 1988 மார்ச் 19-ம் திகதி மட்டக்களப்பு – அம்பாறை அன்னையர் முன்னணியின் தலைவி அன்னை பூபதி இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அறப்போராட்டத்தைத் தொடங்கினார். 32 நாட்கள் நீடித்த அந்த உண்ணாநோன்பின் இறுதியில் அவர் தனது உயிரைத் தியாகம் செய்தார்.

அன்னை பூபதியின் தியாகம் தமிழ் தேசத்தின் இருப்பை உலகிற்கு உரக்கச் சொன்னது. தியாக தீபம் திலீபனைத் தொடர்ந்து அன்னை பூபதியின் ஈகம், போராட்டக் களத்தில் ஒரு பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

தற்போது பூகோள ஆதிக்கப் போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ள ஒரு மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இலங்கைத்தீவில் நிலவும் இந்தச் சூழலால் தமிழர்கள் தொடர்ச்சியாகக் கையாளப்பட்டு வருகின்றனர். இந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுபடத் தமிழர்கள் சரியான அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

“எந்தவொரு பூகோள ஆதிக்கப் போட்டி நிலவினாலும், தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, தேசம் மற்றும் இறைமை ஆகிய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க எந்தத் தலைமைத்துவம் உறுதியுடன் முன்னிற்கின்றதோ, அந்தத் தலைமைத்துவத்தையே மக்கள் ஆதரிக்க வேண்டும். அதுவே இத்தகைய ஈகங்களுக்குச் செய்யும் உண்மையான மரியாதையாகும்” என அவர் வலியுறுத்தினார்.

NPP

இலங்கையின் இறுதிக் கட்டப் போர்; சர்வதேச விசாரணைக்கு அரசு இணங்காது

March 20, 2026

இலங்கையில் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற போர் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் இணங்காது என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

gold

சரிகிறது தங்கத்தின் விலை

March 20, 2026

இலங்கையின் இன்றைய தினம் (20.03.2026) தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

China

ஆசியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு சீனா ஆதரவு

March 20, 2026

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக உலக நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளன.

central-bank

மத்திய வங்கி சங்கம் கோரிக்கை

March 20, 2026

நாட்டில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் வங்கி

us

அமெரிக்க விசேட பிரதிநிதி ஜனாதிபதி சந்திப்பு

March 20, 2026

இலங்கைக்கு வருகை தந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோர்

Canada Pass

கனேடிய அரசின் புதிய உத்தரவாதம்!

March 20, 2026

ஒன்டாரியோ – கனடாவின் கூட்டாட்சி அரசு புதிய சேவை தரநிலையை அறிவித்துள்ளது. இதன் படி, 2026 ஏப்ரல் 1 முதல்,

jail

ஒரே இரவில் மூன்று வீடுகளில் கொள்ளை: நால்வர் கைது

March 20, 2026

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெறும் கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே இரவில் மூன்று

Accident

கேகாலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

March 20, 2026

கேகாலை – ஹேனகந்த பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

worl

உலக முடிவில் விழுந்த யாழ். பல்கலைக்கழ மாணவி

March 20, 2026

நுவரெலியா, ஹோட்டன் சமவெளி (Horton Plains) பகுதியில் சுற்றுலா மேற்கொண்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், ‘செல்பி’ புகைப்படம் எடுக்க

C B Canada

கனேடிய மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

March 20, 2026

கனேடிய மத்திய வங்கி (Bank of Canada) தனது முக்கிய வட்டி விகிதத்தை (Policy Interest Rate) மாற்றமின்றி 2.25%

Vij

நடிகர் விஜய் தேர்தலில் நிற்க முடியாது?

March 20, 2026

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததும் போதும்.. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக அவருக்கு ஏதாவது ஒரு பிரச்சினை வந்து

sure

அரசுகளாலும் வல்லரசுகளாலும் தமிழர்கள் இன்றும் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர்

March 20, 2026

இலங்கைத்தீவு சர்வதேச வல்லரசுகளின் பூகோள ஆதிக்கப் போட்டிக்குள் சிக்குண்டுள்ளதால், அரசுகளாலும் வல்லரசுகளாலும் தமிழர்கள் இன்றும் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர் என்று தமிழ்த்