அரசு தனது தோல்விகளையும் முறைகேடுகளையும் மறைப்பதற்காக பொய்களைக் கூறி எதிர்க்கட்சியினர் மீது பழிசுமத்துகின்றது – நாமல் எம்.பி

தேசிய மக்கள் சக்தி அரசு தனது தோல்விகளையும் முறைகேடுகளையும் மறைப்பதற்காக பழைய பொய்களைக் கூறி எதிர்க்கட்சியினர் மீது பழிசுமத்துகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டினார்.

ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைகே கூறினார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது:- “உலக சந்தை விலையை விட ஒரு பீப்பாய்க்கு 45 டொலர் மேலதிகமாகச் செலுத்தி எரிபொருள் கொள்வனவு செய்யப்படுகின்றது.

நட்பு நாடுகளுடன் பேசி குறைந்த விலைக்கு எண்ணெய் பெறுவோம் எனக் கூறி மக்களை ஏமாற்றிய அரசு, தற்போது அதிக விலைக்கு எரிபொருளை வாங்கி அதன் சுமையை மக்கள் மீது சுமத்துகின்றது.

அதேபோல், தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டவே மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பொலிஸார் உள்ளிட்ட அரச நிறுவனங்களை அச்சுறுத்தி, பழைய பொய்களை உண்மை என நிரூபிக்க அரசு முயற்சிக்கின்றது. பொலிஸ்மா அதிபர் நாட்டுக்காகச் செயலாற்ற வேண்டுமே தவிர, ஒரு அரசியல் கட்சியின் தேவைக்காக அல்ல.

அரசு தனது திருட்டுகளை மறைக்கவே எரிபொருள் விலையை மீண்டும் அதிகரித்துள்ளது. கொழும்பு துறைமுக நகரம் மற்றும் மத்தள விமான நிலையம் ஆகியவற்றின் முழுமையான பயனைப் பெற அரசு தவறிவிட்டது.

சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்க வரிச்சலுகைகளை வழங்கி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடினார்கள் என அரசு திட்டமிட்டுப் பொய் கூறுகின்றது.

இவ்வாறான பொய்களைக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் திணறுகின்றனர். எனவே, அரசு தனது கையாலாகத்தனத்தை மறைக்க எம் மீது சேறு பூசுவதை நிறுத்திவிட்டு நாட்டின் தற்போதைய சவால்களை எதிர்கொள்ள முன்வர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

imm_Canada1

கனேடிய அரசுடைய புதிய எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடிவரவு சட்டமூலம்; அகதிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக கண்டனம்

March 23, 2026

கனேடிய அரசு கொண்டுவந்துள்ள புதிய எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடிவரவு சட்டமூலம் அகதிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அங்குள்ள மனித உரிமை

1729659329-POLICE-6

பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கை

March 23, 2026

இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு பதிவு தொடர்பாக, பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட

d

வறட்சியான வானிலை

March 23, 2026

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்

iraa

மார்கஸ் மாகாணத்தில் 25 ஈரானியர்கள் கைது

March 23, 2026

ஈரானின் மார்கஸ் மாகாணத்தில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு புலனாய்வு அமைச்சு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள், இராணுவ நிலைகளின்

Theepal

சுகாதாரப் பிரிவினர் விசேட அறிவுறுத்தல்

March 23, 2026

தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக, பிள்ளைகளை நீரிழப்பில் இருந்து பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என

NAMAL

அரசு தனது தோல்விகளையும் முறைகேடுகளையும் மறைப்பதற்காக பொய்களைக் கூறி எதிர்க்கட்சியினர் மீது பழிசுமத்துகின்றது – நாமல் எம்.பி

March 23, 2026

தேசிய மக்கள் சக்தி அரசு தனது தோல்விகளையும் முறைகேடுகளையும் மறைப்பதற்காக பழைய பொய்களைக் கூறி எதிர்க்கட்சியினர் மீது பழிசுமத்துகின்றது என்று

chan

நோயாளர் காவு வண்டி தட்டுப்பாட்டினால் பறிபோன உயிர்; வட்டுக்கோட்டையில் சம்பவம்

March 23, 2026

நோயாளி ஒருவரை யாழ். போதனைக்கு கொண்டு செல்வதற்கு நோயாளர் காவு வண்டி இல்லாத காரணத்தால் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம்

blas

முன்னாள் ஆட்சியாளர்களுக்குத் தெரிந்தே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் நடத்தப்பட்டனவா?

March 23, 2026

முன்னாள் ஆட்சியாளர்களுக்குத் தெரிந்தே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் நடத்தப்பட்டனவா என்று சமூக மற்றும் சமய மையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை

police

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

March 23, 2026

திருகோணமலை- உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னியா காட்டுப்பகுதியில் இரகசியமான முறையில் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றை பொலிஸார்

in sl

இலங்கை – இந்திய கலாசார ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

March 23, 2026

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கலாசார ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, கொழும்பிலுள்ள இந்திய

mara

மரப்பலகைகளின் நடுவில் மகோகனி பலகைகளை கடத்தி சென்றவர்கள் கைது

March 23, 2026

சப்பு மற்றும் இலவன் மரப்பலகைகளின் நடுவில் மிகவும் சூட்சுமமான முறையில் நுட்பமாக மறைத்து பல லட்சம் ரூபா பெறுமதியான மவோகனி

Vijay

கனடா – பிரம்ப்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவிடம் சேதம்!

March 23, 2026

பிரம்ப்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவிடம் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டு நான் மிகவும் மனம் வருந்துகின்றேன் என்று ஒன்டாரியோ மாகாண நாடாளுமன்ற