நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையை விரிவாக ஆராயும் போது நாளை நடைபெறவுள்ள அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத் திற்கு ஐக்கிய மக்கள் முன்னணி தனது வலுவான கண்டனத்தை அதன் ஸ்தாபகர் மற்றும் செயலாளர் நாயகம் தி. யோக நாயகன் வாயிலாக அறிவித்துள்ளது.
இன்று நாட்டில் உருவாகி வரும் அரசியல் மாற்றங்கள், குறிப்பாக தமிழ் ; மக்களுக்கு இதுவரை கிடைக்காத புதிய வாய்ப்புகளையும் நம்பிக்கையயும் உருவாக்கி வருகின்றன. சுதந்திரத்துக்கு பின்னர்
76 ஆண்டுகளாக பல ஆட்சிகள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள்;, சமத்துவ கோரிக்கைகள்; மற்றும் பாதுகாப்பு தேவைகளை உதாசீனப்படுத்தியதோடு, சில காலங்களில் ஒடுக்குமுறைகளையும் நிகழ்த்தியமை வரலாற்றுச் சாட்சியம். இந்த நிலையில் மாற்றத்திற்கான தெளிவான பாதையை வகுக்கும் ஒரு அரசாங்கம் தற்போது பொறுப்பேற்றிருப்பது மிக முக்கியமான முன்னேற்றமாகும்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கா தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவி யேற்ற முதல் ஆண்டிலேயே கணிசமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. ஊழல் தடுப்பு நடவடிக்கைகள்;, பொருளாதார மீட்பு முயற்சிகள், போதைப் பொருள் ; கட்டுப்பாட்டு திட்டங்கள், கல்வித் துறைக்குத் தேவையான திருத்தங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் அரசு புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. சமூக நீதி மற்றும் நிர்வாக பொறுப்புணர்வு ஆகியவற்றில் அரசின் உறுதியான அணுகுமுறை மக்கள் மத்தியில் மதிப்பைப் பெற்று வருகிறது.
அத்தகைய சூழலில் காரணமற்ற அரசியல் குற்றச்சாட்டுகளின் அடிப்டையில் எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்கள், நாட்டின் முன்னேற்றத்துக்கும் மக்களின் நலனுக்கும் இடையூறாக மட்டுமே அமைகின்றன.
கடந்த கால அரசியல் தலைவர்கள் நாட்டைப் பொருளாதார வீழ்ச்சிக்குள் தள்ளியதையும் சிறுபான்மை இன மக்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பெருமளவில் ஒடுக்கியதையும் மக்கள் நன்கு அறிந்துள்ளனர். சில எதிர்க்கட்சிகள் மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றன. நாளை ற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டமும் அதே அரசியல் அச்சத்தின் வெளிப்பாடே.
எனவே தமிழ் பேசும் மக்களும் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தை முழுமையாகப் புறக்கணிப்பதே நல்ல முடிவாகும். நாட்டை இனமத வேறுபாடின்றி சமமாக வழிநடத்தும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்துக்கு தமிழ் பேசும் மக்களின் ஆதரவு தொடர வேண்டும்.
நாட்டின் அரசியல் நிலைத்தன்மை, பொருளாதார மேம்பாடு, இன ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதை ஐக்கிய மக்கள் முன்னணி வலியுறுத்துகிறது.
By C.G.Prashanthan