அமெரிக்காவுக்கு எதிராகக் குரல் கொடுக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு முதுகெலும்பு இல்லை – குமார் குணரத்தினம்

உலக நாடுகளை தற்போது அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியுள்ள அமெரிக்காவின் கொடூரமான அதிகாரப் போட்டிக்கு எதிராகக் குரல் கொடுக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு முதுகெலும்பு இல்லை எனவும் அவர்கள் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரத்னம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

“வர்க்கத்திற்கு அதிகாரம் – அதிகாரத்திற்கு கட்சி” எனும் தொனிப்பொருளில் முன்னிலை சோசலிசக் கட்சியின் நான்காவது தேசிய மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது இதில் தலைமையுரை ஆற்றும் போதே குமார் குணரத்தினம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தனது உரையில் மேலும் கூறுகையில்;

இன்று இந்நாட்டை ஆட்சி செய்யும் ஜே.வி.பி தலைமையிலான அரசாங்கம் தமக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளை மிக மோசமான முறையில் மீறி வருகின்றது. வரலாற்றில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த ஒரு கட்சி இன்று அதிகாரத்திற்கு வந்தவுடன் அதனை விடவும் பாரதூரமான பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபு எனும் அடக்குமுறைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முனைகின்றது. இலவசக் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக நின்றவர்கள் இன்று சர்வதேச நாணய நிதியத்தின் நவ தாராளவாதக் கொள்கைகளை எவ்வித தயக்கமுமின்றி அமுல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் மண்டியிட்டுள்ளது மாத்திரமன்றி மோடி மற்றும் ட்ரம்ப் போன்றோரின் பொருளாதார மற்றும் அரசியல் தேவைகளுக்காக முழு நாட்டையும் மக்களையும் காட்டிக்கொடுத்துள்ளது. அமெரிக்கா தனது பொருளாதார ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் வெறியில் மத்திய கிழக்கைத் தாக்கி வருகின்றது. இஸ்ரேல் எனும் பொம்மை அரசை முன்னிறுத்தி காசா பகுதியில் பெரும் இனப்படுகொலை முன்னெடுக்கப்பட்டது. வெனிசுலாவின் ஜனாதிபதி கடத்தப்பட்டமை மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் கனிம வளங்களைக் குறிவைத்துள்ளமை என அமெரிக்கப் பேரரசுவாதம் தனது மனிதாபிமானமற்ற முகத்தைக் காட்டி நிற்கின்றது.

மத்திய கிழக்கில் நடக்கும் போர்களுக்குப் பின்னால் அமெரிக்க மூலதனத்தின் தேவைகளே ஒளிந்துள்ளன. உலகத் தொழிலாளர் வர்க்கத்தைச் சுரண்டி இலாபம் ஈட்டிய பெரு மூலதன உரிமையாளர்கள் இன்று அதிகார போதையில் உள்ளனர். அமெரிக்காவின் இந்த பேரரசுவாத அதிகார வெறிக்கு எதிராக எமக்குள்ள ஒரே மாற்று வழி சோசலிசம் மாத்திரமேயாகும். சர்வதேச ரீதியிலான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் மூலமே இதனைத் தோற்கடிக்க முடியும். கியூபா இன்றும் மனிதாபிமானத்தின் அடையாளமாகத் திகழ்கின்றது. உலகில் சிறந்த கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்டுள்ள கியூபா கொரோனா காலப்பகுதியில் பல நாடுகளுக்கு இலவச மருத்துவ உதவிகளை வழங்கியது. பேரரசுவாத இருளுக்கு மத்தியில் கியூபா இன்றும் சிவப்புக்கொடியை ஏந்தி மனிதாபிமானத்தை உலகிற்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றது.

மாறி மாறி இந்நாட்டை ஆட்சி செய்த அரசியல் கட்சிகள் அனைத்தும் இன்று சிதைந்து போயுள்ளன. அந்தச் சிதைவுகளுக்குள் இனியும் மாற்றத்தைத் தேடுவது முட்டாள்தனமானது. ஜே.வி.பி அரசாங்கம் இன்று திருடர்களைப் பாதுகாக்கும் கொள்கையைப் பின்பற்றி வருகின்றது. இந்தியாவின் தேவைக்காக இந்நாட்டின் நிலங்கள் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை விற்பனை செய்ய இந்த அரசாங்கம் திட்டமிடுகின்றது.

எனவே முகங்களை மாற்றுவதால் அல்லது கட்சிகளை மாற்றுவதால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது. உழைக்கும் வர்க்கத்தினர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே ஒரே தீர்வாகும். பேரரசுவாதம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு எதிராக ஒரு மக்கள் சக்தியைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு இந்நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய