அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் வெனிசுவேலா, கனடா, கிரீன்லாந்த்

வெனிசுவேலா, கனடா ஆகிய நாடுகள் மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்கப் பகுதிகளாகக் குறிப்பிட்ட செய்யறிவு (AI) புகைப்படத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

உலகின் அதிக எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கப் படைகள், அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோவை சிறைப் பிடித்து கடத்திச் சென்றனர்.

இதையடுத்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை முழுவதுமாக அமெரிக்கா ஆக்கிரமிக்க வேண்டும் என அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். இதற்கு, ஏராளமான ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வெனிசுவேலா, கனடா நாடுகள் மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்காவின் பகுதிகளாகக் குறிப்பிட்டு செய்யறிவால் (ஏஐ) உருவாக்கப்பட்ட புகைப்படத்தை அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

அதிபர் டிரம்ப் அவரது சமுக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உள்ள அதிபர் அலுவலகத்தில் டிரம்ப் தனது இருக்கையில் அமர்ந்துள்ளார். அவர் அருகில் உள்ள வரைப்படத்தில் வெனிசுவேலா, கனடா மற்றும் கிரீன்லாந்து அமெரிக்காவின் பகுதிகளாகக் குறிக்கப்பட்டுள்ளன.

இத்துடன், அந்தப் புகைப்படத்தில் பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் உள்ளிட்ட முக்கிய உலகத் தலைவர்கள் அதிபர் டிரம்ப் பேசுவதைத் திகைப்புடன் கேட்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

இறையாண்மை கொண்ட நாடுகளை அமெரிக்காவின் பகுதிகளாகக் குறிப்பிட்டு அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள புகைப்படம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.

முன்னதாக, கனடா நாட்டை அமெரிக்காவின் புதிய மாகாணமாக இணைக்கப்போவதாக அதிபர் டிரம்ப் கூறியதற்கு, பலரும் கண்டனம் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.