”ரஷ்யா மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்காவின் அழுத்தம் பலனளிக்காது” என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து உள்ளார்.
போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா சம்மதிக்காததால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அந்நாட்டின் இரு பெரிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடையை அமல்படுத்தினார். உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் இந்த இரு நிறுவனங்களும், 6 சதவீத பங்கை கொண்டு உள்ளன.
ரஷ்ய அரசுக்கான மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக இந்நிறுவனங்கள் உள்ளன. இது குறித்து அதிபர் புடின் கூறியதாவது: அமெரிக்காவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலிருந்தோ வரும் அழுத்தங்களுக்கு ரஷ்யா ஒருபோதும் அடிபணியாது. ரஷ்யா மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.