கும்பகோணம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற தவெகவின் ‘100 நாள் ஆட்சி ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி’ என்ற தலைப்பிலான சிறப்புப் பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், தவெக முதன்மைச் செய்தித் தொடர்பாளருமான வைகைச் செல்வன் திமுக மற்றும் அதிமுகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அவரது பேச்சின் முக்கிய அம்சங்கள்:
பாத்ரூமில் பதுங்கிய குடும்ப வீரம்:
-
தவெகவின் 100 நாள் ஆட்சியிலேயே திமுகவுக்குப் பெரும் நடுக்கம் ஏற்பட்டுவிட்டது.
-
வாய்க்கு வந்ததைப் பேசியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை காவல்துறை விசாரணைக்கு அழைத்தபோது, அவர் 3 மணி நேரம் பாத்ரூமில் பதுங்கியிருந்தார்; இதுதான் இவர்களது குடும்ப வீரம் என வைகைச் செல்வன் நையாண்டி செய்தார்.
அடுத்த தேர்தலில் மகனையும் காணோம்:
-
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மக்கள் அமரவைத்துள்ளதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். இப்போது அப்பாவைக் காணோம் எனத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்; அடுத்த சட்டமன்றத் தேர்தலில் மகனையும் காணோம் எனத் தேட வைத்துவிடாதீர்கள்.
-
ஓட்டுக்குப் பணம் கொடுத்தும், அண்டா குண்டா கொடுத்தும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற கொள்கையைக் கொண்ட திமுகவுக்குப் படுதோல்வியே கிடைத்துள்ளது.
காணாமல் போகும் அதிமுக:
-
தேர்தலில் அதிமுக பல தொகுதிகளில் டெபாசிட் தொகையை இழந்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
-
விஜய் வருகைக்குப் பிறகு ஒரு திராவிடக் கட்சி காணாமல் போகும் என்ற கணக்கு தப்பவில்லை; அந்தக் கட்சி அதிமுகதான்.
எம்.ஜி.ஆர் போல் அசைக்க முடியாத செல்வாக்கு:
-
கடந்த காலங்களில் நெடுஞ்சாலை, நீர்வளம் போன்ற துறைகளில் ஒப்பந்ததாரர்கள் பணப்பெட்டியுடன் அமைச்சர் வீடுகளில் காத்திருந்தார்கள். ஆனால், தற்போதைய தவெக ஆட்சியில் அப்படி எந்த அமைச்சர் வீட்டிலாவது காத்திருக்கிறார்கள் எனக் கூற முடியுமா?
-
முதலமைச்சர் விஜய்க்கு ஒரு பொய் கூடச் சொல்லத் தெரியாது. அவர் எம்.ஜி.ஆரைப் போன்று மக்கள் மத்தியில் அசைக்க முடியாத மாபெரும் செல்வாக்கைப் பெற்றுள்ளார் என வைகைச் செல்வன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
#VaigaiSelvan #TVK #ChiefMinisterVijay #JosephVijay #TVKGovernment #UdhayanidhiStalin #MKStalin #DMK #AIADMK #Kumbakonam #TamilNaduNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates