அனுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வணக்கத்திற்குரிய பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த மதகுருமார் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
அனுராதபுர ருவன்வெலிசாயவிற்கு முன்பாக உள்ள தானசாலை வளாகத்தில் பௌத்த மதகுருமார் குழுவொன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போதே இந்த உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டது.
முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துத்பௌத்த மதகுருமார் ஆரம்பத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடங்கியிருந்ததுடன், அதனைத் தொடர்ந்து மூன்று பௌத்த மதகுருமார் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்தனர்.
அனுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராகவே இந்த எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது