உங்களால் முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசுக்குச் சவால் விடுக்கின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசின் வாக்கு வங்கி 23 இலட்சத்தால் குறைவடைந்தது. மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் இந்த நிலைமை மேலும் மோசமாகும்.
மீண்டும் 3 சதவீதத்துக்கு இறங்கிவிடுவோம் என அரசு அஞ்சுகின்றது. முடிந்தால் தேர்தலை நடத்துமாறு அரசுக்குச் சவால் விடுக்கின்றோம் என்றார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன இணைந்து செயற்படுவதற்கு ஆதரவாளர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.