பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட அதி சொகுசு கப்பல் ஒன்று நேற்று திங்கட்கிழமை (15) நாட்டை வந்தடைந்துள்ளது.
குறித்த அதி சொகுசு கப்பலானது நேற்றைய தினம் காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
மால்டா, அரசாங்க கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட 242 மீட்டர் நீளமுள்ள “லுமினாரா” என்ற அதி சொகுசு கப்பலே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பலானது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 135 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 375 ஊழியர்களுடன் இலங்கைக்கு வந்துள்ளது.
மேலும், இந்தக் கப்பலில் உள்ள சுற்றுலாப் பயணிகள் காலி நகரைச் சுற்றிப் பார்க்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.