அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டண உயர்வைக் கோரும் திட்டம் எதுவுமில்லை என மின்சக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இன்று (11) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், சமீபகாலமாக எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், மின்சார உற்பத்திச் செலவைக் குறிப்பிட்ட அளவிற்கு நிர்வகிக்க முடிந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
எனவே, வரவிருக்கும் காலாண்டிற்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமில்லை என்றும், கட்டண உயர்வைச் சமர்ப்பிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
அத்துடன், அடுத்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இது தொடர்பாக மின்சக்தி அமைச்சு தேவையான படிகளை மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் கூறினார்.
.